எண்ணற்ற புரட்சியை ஏற்படச் செய்தது எது?
எந்த ஒரு சடங்கும், பார்ப்பனனின்றி முடியாது. பார்ப்பனர் வந்தால்தான் அது கவுரவம் என்று இருந்த நிலை மாறி, இன்று எந்தச் சடங்குக்கும் பார்ப்பனரை வரவழைப்பதென்பது அவமானம், நமது சுயமரியாதைக்குக் கேடு என்று கருதும் நிலைக்கு வைத்தது எது? இவ்வளவுதானா? தாழ்த்தப்பட்ட - இழிகுலமென்று கருதிய மக்களை மேயராக்கி, மந்திரியாக்கி, மகிமையளித்தது எது? இவ்வளவும் இன்னும் இதுபோன்ற எண்ணற்ற புரட்சிகரமானவைகளையும் நாட்டிலே தோற்று வித்தது சுயமரியாதை இயக்கமே என்பதை யாரே மறுக்க வல்லார்?
- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.7.1939
- ‘மணியோசை’
No comments:
Post a Comment