ஜாதி மதத்தைச் சாய்த்தது எது?
அந்த ஸ்மிருதி இப்படிச் சொல்கிறது, இந்த சுருதி அப்படிச் சொல்கிறது என்ற முறையைக் கொண்டே நடந்து வந்த பாலிய விவாகக் கொடுமை மாறி, சம்மத வயதுச் சட்டத்தை நாட்டிலே உண்டாக்கி அதன்படி மக்கள் நடக்கும்படி செய்து வைத்தது எது?
ஜாதி பேதமெனும் ‘சைத்தான்’ மக்களை ஆட்டி அடக்கி ஒடுக்கி இருந்த நிலைமாறி, பார்த்தால் தோஷம், தொட்டால் பாவம் என்ற நிலை மாறி பெரும்பாலோருக்குள் ஒருவருக் கொருவர் பழகவும் உண்ணவுமேயன்றி, பெண் கொடுக்கவும் வாங்கவுமான நிலை ஏற்பட்டதும், அதுவும் சர்வ சாதாரண மானதாக இன்று கருதப்படுவதுமான நிலையைச் செய்தது எது?
அரசாங்க ஆதிக்கம், உத்தியோக வர்க்கம் ஆகியவற்றால் தவிர, மற்றைய பொது வாழ்க்கையிலே, உயர் ஜாதிக்காரனென் பான், தாழ்ந்த ஜாதிக்காரன் என்பானுக்குக் கை எடுக்கச் செய்தது எது?
- தந்தை பெரியார், ‘குடிஅரசு’, 16.7.1939
- ‘மணியோசை’
No comments:
Post a Comment