“மதம் மனிதனுக்கு எவ்வளவு முட்டாள் தனத்தைக் கற்பிக்கிறது பாருங்கள்! செத்துப் பொசுக்கப்பட்ட அந்த சாம்பலைத் தண்ணீரில் கரைத்து விடப்பட்ட மனிதனுக்கு பசி தீரவும், சுகமடையவும் - அரிசி, பருப்பு, காய்கறி, செருப்பு பார்ப்பான் மூலம் மேல் லோகத்திற்கு அனுப்பிக் கொடுப்பதென்றால் மனிதனுக்குச் சிறிதாவது பகுத்தறிவு இருக்கின் றது என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?
பெற்றோர்களை - இறந்து போனவர்களை மதிக்க வேண்டாம் என்று நான் சொல்ல வரவில்லை. அதற்காக பார்ப்பானின் காலில் ஏன் விழவேண்டும்? அவன் கால் கழுவிய தண்ணீரை ஏன் குடிக்க வேண்டும்? இது மதக் கட்டளை, மதத் துவேஷம் என்றால் இப்படிப்பட்ட மதம் ஒழிய வேண்டாமா?
கல்யாணம், கருமாதி, கல்லெடுப்பு முதலிய சடங்குகள் பார்ப்பானுக்கு அழவே கற்பிக்கப்பட்டிருக்கின்றனவேயொழிய அவற்றினால் வேறு பலன் என்ன இருக்கிறது?
- தந்தை பெரியார்
ஆதாரம்: நூல் - சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தது ஏன்?
- ‘மணியோசை'
No comments:
Post a Comment