ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் 1.50 லட்சம் பேருக்கு   கரோனா தொற்று ஏற்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 6, 2020

ஜூலை 15 ஆம் தேதி சென்னையில் 1.50 லட்சம் பேருக்கு   கரோனா தொற்று ஏற்படும்!

மருத்துவப்  பல்கலைக்கழக ஆய்வில் தகவல்


சென்னை, ஜூன் 6 தமிழ்நாட்டில் இப்போது உள்ள கரோனா பரவல் நிலை நீடித்தால் அடுத்த மாதம் (ஜூலை) 15- ஆம் தேதி 3.3 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும். என டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் நேற்று வரையிலான நிலவரப்படி கரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 694 ஆகும். சென்னையில் மட்டும் 19 ஆயிரத்து 826 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர் என்ற நிலையை அடைந்திருக்கிறது. மொத்த பாதிப் பில் சென் னையில் மட்டும் 69.09 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி கண்ணுக்கு தெரியாத கரோனா வைரசால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் மிக அபரிமிதமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


இந்தநிலையில் தமிழ்நாடு டாக் டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல் கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சுதா சேசய்யன், நோய் பரவியல் துறை தலைவர் டாக்டர் சிறீனிவாஸ் உள்ளிட்ட சில நிபுணர்கள் கொண்ட குழு அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற பல்வேறு தரவுகள், சான்றுகள் அடிப் படையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.


அதாவது இப்போது உள்ள நிலை நீடித்தால் ஜூலை மாதம் 15- ஆம் தேதி தமிழகத்தில் 3.3 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்படு வார்கள். இதில் சென்னையில் மட்டும் 1.50 லட்சம் பேர் பாதிக் கப்படுவார்கள் என்று கணக்கிடப்பட் டுள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் பலியாகும் நபர்களின் எண்ணிக்கை 1,949 ஆக இருக்கும் என்றும், சென்னையில் மட்டும் பலி எண்ணிக்கை 1,654 ஆக இருக்கும் என்றும் அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன் தொடர்ச்சியாக யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு செப்டம் பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் கரோனா பாதிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், அதன் பின்னர் படிப்படியாக நோயின் தாக் கம் குறையும் என்றும் தெரியவந் துள்ளது.


டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கை, தமிழக அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது.


No comments:

Post a Comment