மத்திய அரசுக்கு சோனியா காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 9 100 நாள் வேலை திட்டம் பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல என்றும், மத்திய அரசு தனது அதிகா ரத்தை பயன்படுத்தி இந்தத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு உதவவேண்டும் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தி யுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளதாவது:
காங்கிரஸ் ஆட்சியின் போது கடந்த 2005ஆம் ஆண் டில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டம் (100 நாள் வேலை திட்டம்) பயனுள்ள, ஆக்கப் பூர்வமான திட்டம் ஆகும். பசி, பட்டினியால் வாடும் மக்க ளுக்கு உதவ இந்த திட்டம் வகை செய்கிறது.
ஏனெனில் இந்த திட்டத் தின் மூலம் மக்களின் கையில் பணம் நேரடியாக போய்ச் சேருகிறது. சுதந்திர இந்தியா வில் சிறந்த திட்டத்துக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விட சிறந்த உதாரணம் எதுவும் கிடையாது.
இந்த பயனுள்ள திட்டம் என்பதால் தான் பல ஆண்டு களாக நீடிக்கிறது. இந்த திட் டத்தை எதிர்க்கும் ஆட்சியில் கூட கடந்த 6 ஆண்டுகளாக இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.
காங்கிரஸ் ஆட்சியின் தோல்விக்கு அடையாளமாக இந்த திட்டம் விளங்குவதாக மோடி குறை கூறினார். ஆனால் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த திட்டத்தை மத்திய அரசால் முடக்க முடி யவில்லை. அதனால் பின் வாங்கிவிட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மிகச்சிறந்த திட்டம் என்பதால் அதை தூய்மை இந்தியா திட்டம் போன்ற திட்டங்களுடன் ஒருங்கி ணைத்து அதற்கு புது வடிவம் கொடுக்க இப்போது மோடி அரசு முயற்சிக்கிறது.
மத்திய நிதியமைச்சர் நிர் மலா சீதாராமன் இந்த திட் டத்துக்காக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக தொகையை தாமதமாக ஒதுக்கி உள்ளார். கடந்த மே மாதத்தில் மட்டும் 2 கோடியே 19 லட்சம் குடும்பத்தினர் இந்த திட்டத் தின் மூலம் வேலை வாய்ப்பை பெற்று இருக்கிறார்கள்.
கோடிக்கணக்கான மக்க ளின் வறுமையை போக்கும் உலகின் மிகப்பெரிய இந்த திட்டத்தை தேசம் அங்கீ கரித்து உள்ளது. அனைவருக் கும் சமஊதியம் வழங்க வகை செய்யும் இந்த திட்டம் கிரா மப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு சமூக மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வாறு சோனியா காந்தி கூறி உள்ளார்.
No comments:
Post a Comment