10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை (ஜூன் 10) அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்:  தலைவர்கள் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை (ஜூன் 10) அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்:  தலைவர்கள் அறிவிப்பு



சென்னை, ஜூன்9 "பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, தி.மு.க. தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை (10.6.2020) நடைபெறுகிறது'' என, அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள், நேற் றிரவு (9.6.2020) கூட்டாக விடுத்த அறிக்கையில் அறிவித்துள்ளார்கள்.


அதன் விவரம் வருமாறு:


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்,


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி,


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி,


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ,


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்


இரா.முத்தரசன்,


இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன்,


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்


தொல்.திருமாவளவன்,


மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்


எம்.எச்.ஜவாஹிருல்லா,


கொங்கு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்,


இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து


ஆகியோர், நேற்றிரவு கூட்டாக விடுத்த அவ்வறிவிப்பு வருமாறு:


கரோனா என்ற கொடிய நோய்த் தொற்றால் தமிழகம் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகிறது. மார்ச் மாதம் 25 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, 68 நாள்கள் கடந்துவிட்ட நிலையில், ஜூன் மாதம் 30ஆம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகும் நோய்த்தொற்று குறையும் என்று நம்ப முடியாத அளவுக்கு, தினந்தோறும் 1500-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக் கப்பட்டும், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பேரழிவைச் சந்தித்து வருகிறது தமிழகம்.


உண்மைகளை மறைத்தும் - தரவுகளைத் திரித்தும் அ.தி.மு.க. அரசு அலட்சியம்!


மருத்துவ நிபுணர்கள், அடுத்த இரண்டு மாத காலத்தில் நோய்த்தொற்று மேலும் அதிகமாகப் பரவும் என்று எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் வழக்கம்போல் கரோனா தொற்றின் உண்மை நிலையை மறைத்தும், தரவுகளைத் திரித்தும், அலட்சியமாகவும், அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.


நோய்ப்பரவல் அதிகமான நிலையில் ஊரடங்கைத் தளர்த்தி யும், மதுபானக் கடைகளைத் திறந்தும், கடமை தவறிச் செயல்பட்ட தமிழக முத லமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது அடுத்தகட்ட தவறான செய்கையாக, “பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்தியே தீருவேன்'' என்று வறட்டுப் பிடிவாதம் பிடித்து வருகிறார்.


தேர்வைத் திணித்து இலட்சக்கணக்கானோரை வெளியே வர வைப்பதா?


ஒன்பது இலட்சம் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியில் வந்து தேர்வுகள் எழுதியாக வேண்டும். இதனால் அவர்களது பெற்றோர்களும் இலட்சக் கணக்கில் வெளியில் வந்தாக வேண்டும். 3 இலட்சம் ஆசிரியர்களும், பல இலட்சம் ஊழியர்களும் பணிக்கு வந்தாக வேண்டும். இதைப் பற்றிய கவலையே தமிழக அரசுக்குக் கிஞ்சித்தும் இல்லை.


மேலும், இந்த கரோனா நோய்த் தொற்றால் சிறுவர்கள், சிறுமியர்கள் அதிகம் பாதிக்கப்பட் டுள்ளனர். யாரையும் வெளியில் வரவேண்டாம் என்று சொல்லும் அரசாங்கமே, தேர்வு என்று கட்டாயமாகத் திணித்து, அவர்களை இலட்சக் கணக்கில் வெளியில் வர வைப்பது ஏன்? இவர்களது உயிருக்கு என்ன உத்தரவாதம் இந்த அரசாங்கத்தால் தரமுடியும்?


மாணவர் சமுதாயம் மீது நடத்தப்படும்


மாபெரும் கொடுமை!


காய்ச்சல் இருக்கும் மாணவர்கள் தனியாக உட்கார்ந்து தேர்வு எழுதியாக வேண்டும் என்று சொன்னதைப் போன்ற இரக்கமற்ற செயல் வேறு என்ன இருக்க முடியும்? இது மாணவர் சமுதாயத் தின்மீது நடத்தப்படும் மாபெரும் கொடுமை. ஏதோ தன்னைச் சர்வாதிகாரி போல நினைத்து எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார்.


“தேர்வைத் தள்ளி வையுங்கள்” என்று அரசியல் இயக்கங்கள் கேட்டது மட்டுமல்ல; பெற்றோர்கள் வீடியோக்களில் கதறுகிறார்கள். ஆசிரியர் சங்கமும் உயர்நீதிமன்றம் சென்றுள்ளது. 'இந்த நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு என்ன அவசியம்?' என்று நீதிமன்றமும் கேட்டுள்ளது. ஆனாலும் ஆணவம் பிடித்த எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இரக்கம் ஏற்பட வில்லை ; ஈரம் கசியவில்லை.


இந்தச் சூழலில் இலட்சக்கணக் கான மாணவ, மாணவியரைக் காக்கும் முயற்சியாக போராட்டம் நடத்தும் நிலைமையை அரசே ஏற்படுத்தி விட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை அரசு தற்போ தைக்கு நிறுத்தக் கோரியும், கரோனா தொற்று முழுமையாகக் குறைந்த பிறகு பெற்றோர் - ஆசிரி யருடன் கலந்தாலோசனை செய்து தேர்வுத் தேதியை குறிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி யும், கண்டன ஆர்ப்பாட்டத்தை 10.6.2020ஆம் நாள் காலை 10 மணிக்கு நடத்துவது என்று முடிவெடுத்துள்ளோம்.


“பத்தாம் வகுப்புத் தேர்வை நிறுத்து! கரோனா காலத்தில் தேர்வுகள் எதற்கு?"


“விளையாடாதே விளையாடாதே ! மாணவர்கள் உயிரோடு விளையாடாதே!”


"கரோனாவை நிறுத்து! அப்புறம் தேர்வை நடத்து!”


“இன்னுமா வரவில்லை இரக்கம்?


தேர்வை ரத்து செய்ய ஏன் தயக்கம்?”


- என்ற முழக்கங்களை நாடு முழுவதும் எழுப்பி எதிரொலித்திடச் செய்வோம்.


இலட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் எதிர்காலத்துக்காக நடைபெறும் இந்த ஆர்ப் பாட்டத்தில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளக் கேட்டுக் கொள் கிறோம். அவரவர் இல்லத்தின் முன்பு அய்ந்து பேர் கூடி, தனிமனித இடை வெளியைப் பின்பற்றியும், கரோனா தடுப்பு உபகரணங்களை அணிந்து கொண்டும் முழக்கங்களை எழுப்பு மாறும் கேட்டுக் கொள்கிறோம்.


தேர்வைவிட உயிர் முக்கியம் என்பதை உணர்த்துவோம்!


இரக்கமற்ற அரசின் இதயத்தை வேகமாகத் தட்டி எழுப்புவதாக இந்த ஆர்ப்பாட்டம் அமைய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


தேர்வை விட உயிர் முக்கியம் என்பதை இந்த அரசுக்கு உணர்த்துவோம். அ.தி.மு.க. அரசின் அரசியல் சித்து விளையாட்டில் இருந்து இலட்சக் கணக்கான மாணவ - மாணவியரைக் காப்போம்!


இவ்வாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.


No comments:

Post a Comment