ஒற்றைப் பத்தி - ஆதிசங்கரரும் சூத்திரரும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

ஒற்றைப் பத்தி - ஆதிசங்கரரும் சூத்திரரும்!

சநாதனமே சங்கரர்  தரும் நெறி என்னும் கட்டுரையில் சநாதன தர்மத் திற்குக் குரல் கொடுக்கும் காஞ்சி சங்கராச்சாரியார்,


‘‘பழைய தர்மங்களை எல்லாம் முறிவுபடாமல் காப்பாற்றப் பிரயத் தனப்பட வேண்டும் என்று எங் களுக்கு ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் ஆக்ஞை இட்டிருக்கிறார்கள். அவர் கொள்கையை  நான் நிறைவேற்றுவ தாலும், நீ வைத்துக் கொண்டிருப்ப தாலும்தான் நீங்கள் இங்கு வரு கிறீர்கள். அவருடைய ஆக்ஞையை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமை. ஆக்ஞையைக் காரி யத்தில் நிறைவேற்றாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். சாஸ்திர வழக்கங்கள், லோக க்ஷேமம், ஆத்ம க்ஷேமம் இவற்றைக் கருதியே வகுக்கப்பட் டவை என்பதையாவது உங்களுக்குப் புரிய வைக்கப் பார்க்கிறேன்” என்று சநாதனத்தின் பெருமையை நிலை நாட்ட முயல்கிறார்.


‘‘ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் ஆக்ஞை” ஒரு பகுதியை பார்ப் போமா?


Brahma-Sutra 1.3.38: San skrit text and English translation.


śravaṇā dhyaya nārtha pratiṣedhāt smṛteśca || 38 ||


śravaṇa-adhyayana-artha-pratiṣedhāt—Because of the prohibition of hearing, studying, and understanding; smṛteḥ—in the Smriti; ca—and.


38. And because of the prohibition in the Smriti of hearing and studying (the Vedas) and knowing their meaning and performing Vedic rites (to Sudras, they are not entitled to the knowledge of Brahman).


இந்த ஒரு வரியிலான சூத் திரத்திற்கு,  ஆதிசங்கரர் கொடுத்த விளக்கம் வருமாறு:


‘‘சூத்திரர்கள் வேதங்களைக் கேட்பதற்கும் படிப்பதற்கும், வேத முறைகளை அறிந்துகொள்வதற்கும் மேற்கொள்வதற்கும் ஸ்மிருதி (சமய நெறி) தடை விதிக்கிறது. இந்தக் கார ணத்தாலும் சூத்திரர்கள் (வேதங் களைப்) படிப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள்.


கீழ்க்கண்ட பகுதி வேதத்தைக் கேட்பதற்கான தடையைத் தெரிவிக் கிறது.


‘வேதத்தைக் கேட்பவன் காதுகள் காய்ச்சிய ஈயத்தாலும் அரக்காலும் நிரப்பப்பட வேண்டும்.’  ‘சூத்திரன் ஓர் இடுகாடு போன்றவன்; எனவே அவன் அருகில் வேதத்தைப் படிக்கக் கூடாது.’


இந்தக் கடைசிப் பகுதியிலிருந்து வேதத்தை படிப்பதற்கான தடை உடன் உருவாகிறது. ஏனெனில், அவன் அருகில்கூட வேதத்தைப் படிக்கக் கூடாது என்றால்,  அவனால் எப்படி அதை கற்றுக் கொள்ள முடியும்? மேலும் அந்தச் சூத்திரர்கள் வேதத்தைப் படிப்பதற்கு வெளிப் படையாகத் தடையும் உண்டு. ‘அவன் அதைப் பதுக்கினால்,  அவன் நாக்குத் துண்டிக்கப்பட வேண்டும்; அவன் அதைப் பாதுகாத்தால், அவன் உடல் துண்டிக்கப்பட வேண்டும்’.   வேதங் களைக் கேட்பதற்கும் படிப்பதற்கு மான தடை, வேத முறைகளை அறிந்து கொள்வதற்கும் மேற்கொள் வதற்குமான தடையையும் தந்து விடுகிறது. இருந்தபோதிலும், ‘சூத் திரனுக்கு அறிவைப் புகட்டக் கூடாது’, ‘படிப்பிற்கும், ஈகத்திற்கும், பரி சளிப்பிற்கும் இருபிறப்பாளர்களாகிய பிராமணனுக்கு மட்டுமே தகுதி உண்டு’ என்பன போன்ற வெளிப் படையான தடைகளும் உள. எது எப்படி இருப்பினும் வேதங்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு (சூத்திரர்களுக்கு) எந்தத் தகுதியும் கிடையாது என்பது முற்ற முடிந்த ஒன்றாகிறது”.


-The Sacred Books of the East, Vo;. XXXIV. Ed.by F.Maxmuller. The Vedaantha Sutras withu commentary by Shankara charya translated bu George Thibaut, p/ 238-9, published by Motilal Banarasidass, 1969.


ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் நன்றி: ஆதி சங்கரரின் மக்கள் விரோதத் தத்துவம், பேராசிரியர் கே.எஸ்.பகவான், தமிழாக்கம்: வீ.செ.வேலிறைவன், மகரந்தம், கரூர் (1980)


 - மயிலாடன்


 


No comments:

Post a Comment