செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 9, 2020

செய்தித் துளிகள்....

* புத்தாம் வகுப்புத் தேர்வைத் தள்ளி வைக்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் - இது உயர்நீதிமன்றத்தின் கருத்து.


* இலடாக் பகுதியில் இந்தியா - சீனா இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.


* கரோனாவைக் கட்டுப்படுத்த வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்துமாறு மத்திய அரசு உத்தரவு.


* தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள் முதல் நிலையங்களில் மழையில் நனைந்து நெல் மூட்டைகளும் வீணாகும் நிலை.


* ஆதிச்சநல்லூர் அகழ்வில் இரு முது மக்கள் தாழி கண்டெடுப்பு!


* இந்தியாவுக்கு பாரத் பெயர் மாற்றம் அவசியமில்லாதது என்று உச்சநீதிமன்றம் வழக்கை விசாரிக்க மறுப்பு


* இந்தியக் குடியரசுத் தலைவர், பிரதமருக்காக அமெரிக்காவில் ஏவுகணை ரேடார் வசதிகளுடன் விமானங்கள் தயாராகின்றன.


* ஒரிசாவில் பயிற்சியின்போது சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்த அனீஸ்பாத்திமா மரணம்.


* கடந்த இரு நாள்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 106 காசுகளும், டீசல் லிட்டருக்கு 103 காசுகளும் உயர்வு.


* மதுரையில் முதன் முதலாக கரோனா நோயாளிக்கு பிளாஸ்மா  சிகிச்சை.


* யூனியன் பிரதேசமான டாமன்டையூ பகுதிகளில் கரோனா பாதிப்பு இல்லை.


No comments:

Post a Comment