கழகத் தலைவர் இரங்கல்
தமிழக அமைச்சரவையில் உள்ள மூத்த அமைச்சர்களில் ஒருவரான திண்டுக்கல் சீனிவாசன் அவர்களது துணைவியார் திருமதி கண்ணாத்தாள் (வயது 67) நேற்று (2.5.2020) உடல்நலக் குறைவினாலும், முதுமையினாலும் காலமானார் என்பதை அறிய மிகவும் வருந்துகிறோம்.
அவரது மறைவால் வாடும் அமைச்சருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
3.5.2020
No comments:
Post a Comment