சென்னை, மே 5- மத்திய அரசில் பணியாற்றி வரும் 48 இலட்சம் ஊழியர்களுக்கும், முன்னாள் இராணுவத்தினர் உள்ளிட்ட 65 இலட்சம் ஓய்வூதியர்களுக்கும் ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை 18 மாதங்களுக்குப் பஞ்சப் படியை முடக்கம் செய்ய மத் திய அரசு நிர்வாக உத்தர விட்டுள்ளது.
இந்த முடிவு, பாதிக்கப்பட உள்ள ஒரு கோடியே, பதி மூன்று இலட்சம் பேருக்கு மட்டுமல்லாது, நாட்டுப்பற்று மிக்க நல்லோரை நிலை குலையவைத்துள்ளது.
பொருளாதார மேம்பாட் டையும், பொருளாதார நீதி யையும் உறுதிப்படுத்தவும், கொடூரமான கரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்க ளைக் காப்பாற்றவும் மத்திய அரசும், மாநில அரசும் எடுத்து வருகின்ற முயற்சி களுக்கு அமைப்பு தன் நல்லா தரவைத் தெரிவிக்கிறது. மருந்துவ நெருக்கடியை - சவால்களை மகத்தான ஆளு மையோடு எதிர்கொள்ளும் தருணத்தில் நாட்டை நேசிக்க வேண்டிய கடமை அனைவ ருக்கும் உண்டு என்பதை உணர்கிறோம். நாடும், நேர்மையான முடிவுகளை எடுப்பதன் மூலம் நேசத்துக் குரியதாக இருக்க வேண்டும்.
எனவே, மத்திய அரசும், மாநில அரசும் பஞ்சப்படி முடக்கம் போன்ற தவறான முடிவுகளைக் கைவிட்டு, நடுநிலை மிக்க நல்லோரின் பாராட்டைப் பெற முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி முன்னாள் தொழிற்சங்கத் தலைவர்க ளின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.பி.இராமன் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment