* கரோனா ஊரடங்கால் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளுக்கு வழக்கமாகப் போடப்படும் தடுப்பூசி போட முடியாத நிலை - இது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று அய்.நா. எச்சரித்துள்ளது.
* கரோனா பாதிப்பால் உலகில் 160 கோடி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு - இது ஒரு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (அய்.எஸ்.ஓ.) அறிவிப்பு.
* ருசிய அதிபர் மிக்கைல் மிஷுஸ்டினுக்குக் கரோனா தொற்று - தனிமைப்படுத்திக் கொண்டார்.
* கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
* புயல்களுக்கான பெயர்களின் பட்டியலில் முதன்முறையாக இரு தமிழ்ப் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முரசு, நீர் - இவைதான் அந்த இரண்டு பெயர்கள்.
* டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வுக்கு குக்கர் சின்னம் நிராகரிப்பு - இது உச்சநீதிமன்ற உத்தரவு.
* வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ்நாடு திரும்புவதற்கு இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம் (nonresidenttamil.org).
* தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனை வளாகத்தில் 12 விஷப் பாம்புகள் பிடிபட்டன.
* மத்திய நீர் வளத்துறையோடு காவிரி மேலாண்மை வாரியத்தை இணைத்தைக் கண்டித்து நாகை விவசாயிகள் வாயில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
* இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு உதவிட ரூ.65 ஆயிரம் கோடி தேவை என்கிறார், இந்திய ரிசர்வ் வங்கியின் மேனாள் ஆளுநர் ரகுராம் ராஜன்.
* சென்னை மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை அடக்கம் செய்த இடத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 14 பேர் ஒரு பெண் உள்பட குண்டர் சட்டத்தில் சிறை.
No comments:
Post a Comment