* ஊரடங்கை மீறினால் ரூ.100 அபராதம் மட்டுமல்ல; 14 நாள்கள் தனிமையில் வைக்கப்படுவர்.
* ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட ஆறு மாநில அரசுகள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணிநேரமாக உயர்த்தியுள்ளன.
* பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு மே மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை.
* இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
* வெளி மாநிலங்கள் அல்லது வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவர்.
* இணைய தளம் மூலம் நடைபெறும் சைபர் குற்றங்கள் - ஊரடங்கு காலகட்டத்தில் இருமடங்கு அதிகரிப்பு..
* வாகன விற்பனை கடந்த ஏப்ரலில் பூஜ்ஜியம்.
* சுற்றுலா பாதிப்பால் கொடைக்கானலில் ரூ.400 கோடி வருவாய் இழப்பு.
* கரோனாவிலிருந்து விடுபட்டது தூத்துக்குடி மாவட்டம்.
* பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை அழிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
* ஜி.எஸ்.டி.யை ஓராண்டுக்கு ரத்து செய்யுமாறு ஓட்டல் சங்கம் கோரிக்கை.
* தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைக் கண்காணிக்க மக்களிடம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவிட கார் வடிவ நவீன ‘ரோபோ' இயந்திரத்தை காவல்துறை களம் இறக்கியுள்ளது.
* முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர அவசியமான அனைத்துக் கடைகள் காலை 6 மணிமுதல் மாலை 5 மணிவரை திறக்கப்படலாம்.
* இணையத்தின்மூலம் மதுரை மீனாட்சி திருக்கல்யாணமாம். (பலே, பலே மீனாட்சியின் ஆடை அலங்காரம்கூட மாறுமோ!)
* வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி சென்னையில் போராட்டம்.
* தமிழகத் தொழிலாளர்கள் மகாராட்டிரத்திலிருந்து சென்னை திரும்பிட அம்மாநில முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
* வடலூரில் வள்ளலாரின் தரும சாலையில் நாள்தோறும் 2000 பேருக்கு மூன்று வேளை உணவு! (அங்கேதான் அணையா அடுப்பு!)
* விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தல்.
* மே மாத விடுமுறை ரத்து - வழக்குகளை காணொலிமூலம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
* மகாராட்டிராவில் உள்ள குருத்துவாராவுக்குச் சென்று திரும்பிய பஞ்சாபைச் சேர்ந்த173 பேருக்குக் கரோனா பாதிப்பு.
No comments:
Post a Comment