வள்ளியூர், மே 5- கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு அணு உலையிலும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிஷேகப் பட்டியில் உள்ள மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி வருடாந்திர பராமரிப்பு பணிக்காக முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப் பட்டது. பணியாளர்கள் பற்றாக்குறையால் பராமரிப்பு பணி அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி, 220 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியுள்ளது.
No comments:
Post a Comment