மதுக்கடைகளைத் திறந்தால் கரோனா தொற்று அதிகமாகும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 6, 2020

மதுக்கடைகளைத் திறந்தால் கரோனா தொற்று அதிகமாகும்

 மருத்துவர்கள் எச்சரிக்கை


சென்னை, மே 6 டாஸ்மாக் மது பானக் கடைகளைத் திறந்தால், மக்கள் நடமாட்டம் அதிகமாகி கரோனா தொற்று வேகமாக பரவும் அபாயம்  உள்ளது. கூட்டத் தைக் கட்டுப்படுத்த அதிக காவல் துறையினரைப் பணியில் ஈடுபடுத்த நேரிடுவதுடன் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


சென்னை தவிர கரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதி களில் நாளை முதல் (மே 7) டாஸ் மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இதற்கு அரசியல் கட்சித்தலைவர் கள், பல்வேறு அமைப்புகள் கண் டனம் தெரிவித்துள்ளன. தற் போதைய இக்கட்டான சூழலில் மதுக் கடைகளைத் திறப்பது ஆபத் தானது என்று மருத்துவர்களும் கூறுகின்றனர்.


டில்லி, மும்பை, ஆந்திரா, கருநாடகாவில் மதுக்கடைகளைத் திறந்தபோது, மது வாங்க ஏராள மானோர் கூடுவதும், சில கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் காத்திருப்பதும், சமூக இடை வெளியைப் பின்பற்றாமல் தள்ளு முள்ளு ஏற்படுவதும், அதனால் காவல்துறையினர் தடியடி நடத் துவதும் அரங்கேறி வருகிறது.


இந்நிலையில், தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறந்தால் அங்கு கூடும் கூட்டத்தை முறைப் படுத்த ஏராளமான காவல்துறையினர் தேவைப்படுவார்கள். டாஸ் மாக் கடைகளில் 6 அடி இடை வெளியில் நின்றுதான் மது வாங்க வேண்டும் என அரசு அறிவுறுத் தினாலும், அது நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை. இதுதவிர முன்கூட்டியே கூட்டம் திரளும்.


வெளிமாநிலத் தொழிலாளர் போராட்டம், போக்குவரத்தைக் கட்டுப்படுத்துதல், வாகனங்களைப் பறிமுதல் செய்தல், விழிப்புணர்வு பிரச்சாரம் என வழக்கமான கரோனா தடுப்புப் பணிகளில் காவல்துறையினரின் எண்ணிக் கையைக் குறைத்து டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பினால் சட்டம், ஒழுங்கைப் பராமரிப்பது பிரச்சினையாகிவிடும்.


அதுமட்டுமல்லாமல், ஏற் கெனவே பொருளாதாரச் சிக்கலில் தவிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மதுவுக்கு பெருமளவு செல விட்டு அதனால் குடும்பம் மேலும் வறுமையின் பிடியில் சிக்கும்.


மது வாங்கப் பணம் கேட்டு வீட்டில் மனைவி, குழந்தைகளைத் துன்புறுத்தும் கொடூரமும் அரங் கேறும். அத்துடன் 40 நாட்கள் மதுவை மறந்து இருந்தவர்கள் மீண்டும் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாவார்கள்.


மேலும், தற்போதைய சூழலில் மது அருந்தினால் அவர்களுக்கு உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து, வைரஸ் எளிதாகத்  தொற்றும் அபாயம் இருப்பதாக மருத்து வர்கள் எச்சரிக்கின்றனர். தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக் கும் நிலையில், அவை மீண்டும் பேருரு எடுக்க டாஸ்மாக் காரண மாக அமைந்துவிடும் என மருத்துவ வட்டாரங்கள் எச்சரிக்கின்றன.


இதுபோன்ற அபாயங்களைத் தவிர்க்க, மதுக்கடைகளைத் திறக் கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மருத் துவர்கள் வலியுறுத்துகின்றனர்.


No comments:

Post a Comment