வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்:  சோனியா காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 5, 2020

வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயண செலவை காங்கிரசே ஏற்கும்:  சோனியா காந்தி


புதுடில்லி,மே5வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும் ரயில் பயணச் செலவை காங்கிரசே ஏற்கும் என அதன் தலைவர் சோனியா காந்தி கூறி உள்ளார்.


கரோனா வைரஸ் பர வலைத் தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதிவரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கட்டிட வேலை உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்த வெளி மாநில தொழிலாளர் கள் தங்கள் சொந்த ஊர் களுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். இதேபோல் வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், மற் றும் சுற்றுலா சென்று இருந் தவர்களும் தங்கள் ஊர் களுக்குத் திரும்ப முடிய வில்லை. தற்போது மீண்டும் ஊரடங்கு வருகிற 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது .


இந்த நிலையில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்திரும்ப மத்திய அரசு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து உள்ளது. ஆனால், சில சிறப்பு ரயில் களில் தொழிலாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது.


இதற்கு காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள் ளார்


இது குறித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத் தில் நாடு தழுவிய  ஊரடங் கால் சிக்கித் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும்  ரயில் பயணச்  செலவை காங்கிரஸ் செலுத் துவதாக கூறி உள்ளார்.


சோனியா காந்தி எழுதி யுள்ள கடிதத்தில் கூறி இருப் பதாவது:-


நாடு தழுவிய  ஊரடங் கால் சிக்கித் தவிக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் அவர்கள் சொந்த ஊர் திரும்ப ஆகும்  ரயில் பயணச்  செலவை காங்கிரஸ் ஏற்கும்.


இது எங்கள் தேசிய வீரர் களின் சேவையில் இந்திய தேசிய காங்கிரசின் சிறிய பங்களிப்பாகும். அவர் களுக்காக  ஒற்றுமையுடன் தோளோடு தோள் நிற்கவும் காங்கிரஸ் நிர்வாகிகளை  காங்கிரஸ் தலைவர் கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் கடிதத்தில் நமது தொழிலாளர்கள்  நமது நாட்டின் வளர்ச்சியின் தூதர்களாக உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக் களுக்கு இலவச விமான பயணத்தை ஏற்பாடு செய் வதன் மூலம் நமது அர சாங்கம்  ​​போக்குவரத்து மற் றும் உணவு போன்றவற்றுக் காக அரசாங்கம் கிட்டத் தட்ட ரூ.100 கோடியை செலவு செய்கிறது.


குஜராத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்திற்காக ரயில்வே அமைச்சகம் பிரத மரின் கரோனா நிதிக்கு ரூ.151 கோடி கொடுக்கிறது. அப்படியானால், நமது நாட் டின் தொழிலாளர்களுக்கு குறிப்பாக இந்த நேரத்தில் இலவச  ரயில் பயணத்தை ஏன் கொடுக்க முடியாது?


ஊரடங்கு  குறித்து மத் திய அரசு முன் அறிவிப்பு நோட்டீஸ் அறிவிப்பைக் கொடுக்கவில்லை, எனவே தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது.


இன்றும்கூட, லட்சக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் "நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப விரும்புகின்றனர், ஆனால், பணம் அல்லது இலவச போக்குவரத்து இல்லை


குறிப்பாக கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இந்த நெருக்கடி நேரத்தில் மத்திய அரசும் ரயில் அமைச் சகமும் ரயில் டிக்கெட்டு களுக்கு கட்டணம் வசூலிக் கின்றன.


காங்கிரசின் தொடர்ச்சி யான கோரிக்கைகளை முற் றிலுமாக புறக்கணிக்க மத் திய அரசு, ரயில்வே அமைச் சகம் முடிவு  செய்துள்ளது.


எனவே, இந்திய தேசிய காங்கிரஸ், ஒவ்வொரு மாநில காங்கிரஸ் கமிட்டி யும் ஒவ்வொரு ஏழைத் தொழிலாளி மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஏற்கவேண்டும். இது தொடர்பாக தேவை யான நடவடிக்கைகளை காங்கிரஸ் எடுக்கும் என்று சோனியா காந்தி அதில் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment