தமிழ்நாடு நூலக ஆணைக்குழு நூலகப் பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க தொடர்ந்து குரல் கொடுத்தும் பொது நூலகத் துறையை தனித் துறையாக அறிவிக் கக் கோரியும் தொடர்ந்து செயல்பட் டும் அதில் வெற்றி கண்ட மாநில நூலக ஆணைக்குழு பணியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் மதுரை மாவட்டம் திருமங்கலம் கிளை நூலக நூலகராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நினைவில் வாழும் ச. நடராசன் அவர்களின் வாழ்விணையரும், நூலகத் துறை மேனாள் இயக்குநரும் அண்ணா நூற்றாண்டு நூலக சிறப்பு அலுவலருமான ந.ஆவுடையப்பன் அவர்களின் அன்பு அன்னை யாருமான திருமதி ந.கோமதி அண்ணி அவர்கள் 1.4.2020 அன்று 95ஆம் அகவையில் வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார்கள். அவர்கள் திலகவதியார் பெண்கள் அமைப்பின் மூலம் பள்ளி மாணவ மாணவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள். புத்தகங்கள் நன்கொடையாக வழங்கி சமூகத் தொண்டாற்றியவர். அன்னாரின் நினைவேந்தலின் பொருட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆவுடை யப்பன்,அவருடைய உடன் பிறப்புகள் திருவாளர்கள் முருகேசன், பழனித்துரை, நமசிவாயம், சங்கர சுப்பிரமணியன் ஆகியோர் ரூ.5000 நன்கொடை வழங்கினர். நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment