ஒசூரில் கழகம் சார்பில் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 6, 2020

ஒசூரில் கழகம் சார்பில் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள்


ஒசூர் நான்கு சக்கரவாகனங்கள் பழுது நீக்கும் தொழிலாளர்கள் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு பயன்படும் வகையில் 28.4.2020 அன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. ஒசூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஏ.சத்தியா, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு 150 குடும்பத்தினருக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார்கள். தொழிலாளர்கள் சங்க கவுரவத் தலைவர் லூதர்சாமி, தலைவர் முனியப்பன், செயலாளர் ஜம்சீர்,பொருளாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment