தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் ஏற்பாடு பாராட்டத்தக்கது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 3, 2020

தமிழ்நாட்டில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் ஏற்பாடு பாராட்டத்தக்கது!

வெளிநாடுகளில் பணிக்குச் சென்று தவிக்கும் தமிழர்களை இங்கு அழைத்துவர மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும்!



 தமிழ்நாட்டில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் ஏற்பாடு பாராட்டத்தக்கது; வெளிநாடுகளில் பணிக்குச் சென்று தவிக்கும் தமிழர்களை இங்கு அழைத்துவர மத்திய - மாநில அரசுகள் ஏற்பாடு செய்யவேண்டும்  என்று   திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


மத்திய அரசின்


ஒரு முக்கிய அறிவிப்பு


மத்திய அரசு அறிவித்த பல அறி விப்புகளில் வெளிமாநிலத்தில் வேலைக் காகச் சென்ற தொழிலாளிகள் சொந்த மாநிலத்திற்குத் திரும்ப விரும்பினால் அவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்பதும் ஒரு முக்கிய அம்சமாகும். அரசு செலவில் அவர்களை அனுப்பி வைக்கவேண்டும்.


தெலங்கானா, ஒடிசா தொழிலாளர்கள் ஜார்க்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களுக்கு ரயில்மூலம் அனுப்பப்படுவார்கள் என்பது மான அறிவிப்பும் வந்தது; டில்லிக்கு பக்கத்து மாநிலங்களான பீகார், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களுக்குப் பேருந்துகளில் - தனியே ஏற்பாடு செய் யப்பட்டு அனுப்பப்பட்ட காட்சி தொலைக் காட்சிகளில் செய்தியாகவும் வந்தது.


தமிழக அரசு உடனடி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்


இந்நிலையில், நேற்று (2.5.2020) தமிழ் நாட்டில் சென்னையில் பல பகுதிகளிலும், திருப்பூர் போன்ற பெருநகரங்களிலும் வேலை செய்து வந்த வெளிமாநிலத் தொழி லாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல - நூற்றுக்கணக்கில் கூடி ஆர்ப் பாட்டம் செய்துள்ளனர். பதிவு செய்து அவர்களை அனுப்ப தமிழக அரசு உடனடி ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் - உடனடியாக.


சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களை அனுப்ப ரயில்மூலம் தான் சாத்தியம். அதைத் தாமதிக்காமல் செய்யலாம். அங்கே அவர்கள் சில நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு - பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள பரஸ்பர ஏற்பாடுகளை மத்திய அரசே ஒருங்கிணைக்கலாம்.


மத்திய - மாநில அரசுகளின்


ஒருங்கிணைந்த


அவசர நடவடிக்கை தேவை!


அதுபோலவே வெளிநாடுகளுக்குப் பணி நிமித்தமாகவும், கல்விக்காகவும் சென் றுள்ள தமிழ்நாட்டவர்கள், தமிழ்நாடு திரும்ப விழைவது இயற்கை. அங்கே அவர்கள் வேதனையில் விம்முகின்ற நிலையை மாற்றி - எல்லா நாடுகளிலும் இருக்கிற தமிழ்நாடு திரும்ப விரும்பு வோரை, விமானப் பயணங்கள்மூலம் விரைவாகத் திரும்ப அழைக்க மத்திய - மாநில அரசுகள் ஒருங்கிணைந்த அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அப்படி வரு வோரை தனிமைப்படுத்தி, பரிசோதனைகள் நடத்தி - மருத்துவ ரீதியான நட வடிக்கைகளை விமான நிலையங்களில் செய்து, நேரே எந்தப் பகுதியில் தங்க வைக்கவேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று, போதிய உணவு, குடிநீர், தங்கும் வசதிகளை தனிமைப்படுத்தி - போதிய இடைவெளி களையும் கடைப்பிடிக்க வைத்து, பாதுகாப்புடன் அவர்கள் வீடு திரும்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியது அவசர அவசியம்.


தனிக் குழு செயல்பட முன்வரவேண்டும்


பல குழுக்கள் அமைத்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண தனிக் குழு செயல்பட முன்வர வேண்டும். முதலமைச்சரும், மத்திய உள்துறை, ரயில், விமானப் போக்குவரத்து போன்றவைகள் ஒருங்கிணைந்து செயல் படவேண்டும். கரோனா கொடுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்திலிருந்து அத்தகையவர்களை மீட்க இம்முயற்சிகள் பெரிதும் உடனடியாகத் தேவை!


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


3.5.2020


No comments:

Post a Comment