தென்காசி, மே 6, தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேருராட்சி பகுதியில் கரோனா வைரஸ் ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரையும் பாராட்டி கழகத்தின் சார்பில் தெரிவித்து மதிய உணவு, பாது காப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேருராட்சி பகுதியில் கரோனா வைரஸ் ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் மருத்துவப் பணியாளர்கள், அலுவலகப் பணியா ளர்கள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் பாராட்டி நன்றி தெரிவித்து கீழப்பாவூர் திராவிடர் கழகம். தந்தை பெரியார் குருதி, விழி, உடற்கொடைக் கழகம் சார்பாக 150 பேருக்கு மதிய உணவு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தி.க. செயலாளர் அய்.இராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ் மற்றும் பி.ஆர்.கே.அருண், தென்காசி மாவட்டத் தலைவர் த.வீரன், இளைஞரணித் தலைவர் சு.கோபால், நகரத் தலைவர் மு.இராமசாமி, நெல்லை மண்டல மாணவர் கழக அமைப்பாளர் அ.சவுந்தரபாண்டியன். குட்டி நாரா யணன், அ.பி.சிவா, அழகரசு. திமுக நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் கா.இராஜாமணி. சு.ப.காளிமுத்து, அ.வெற்றி, பேருராட்சி அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள், தன்னார் வத் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற சுகா தாரப் பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த்துறை, அங்கன்வாடி பணியா ளர்களுக்கும் கழகத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.நெல்லை மண்டல திராவிடர் கழகச் செயலாளர் அய்.இராமச்சந்திரன் தலைமையில் திராவிடர் கழகம், தந்தை பெரியார் குருதி, விழி, உடற்கொடைக், கழகத்தின் சார்பில் கழகத்தோழர்கள் அனைவரும் இணைந்து மதிய உணவு ஏற்பாடு செய்து, அனைவரையும் பாராட்டி சிறப் பித்தனர்.
No comments:
Post a Comment