ஜாதிப் பெயர் போடக்கூடாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

ஜாதிப் பெயர் போடக்கூடாது!

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு



தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பபடும் உறுதிப்பிரமானங்களில் (Affidavits) ஜாதியினைக் குறிப்பிடுவது பெரும்பாலும் இல்லை. நான் தயாரிக்கும் மனுக்களில் கூட அதைக் குறிப்பிடுவதில்லை. குடும்ப நல நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிமன்றங்களில் (partition, succession) சில குறிப்பிட்ட வழக்குகளில் மட்டுமே மதம் குறிப்பிடுவதுண்டு.


தற்போது ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாரர் ஜாதி பற்றி குறிப்பிடக்கூடாது என்று அறிவிக்கை கொடுத்துள்ளார்கள்.


1929ம் ஆண்டு செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் பெயருக்குப் பின் ஜாதிப் பெயர் போடுவதில்லை என்று உறுதி எடுத்து ஜாதியைத் தங்கள் பெயர்களில் இருந்து கத்தரித்துக் கொண்டனர். அதன் தாக்கமே இன்று ஜாதிச் சங்கத் தலைவர்கள் கூட தங்கள் பெயருடன் ஜாதிப் பெயர் போடாமல் வெறுமனே உள்ளனர்.


'ஜாதி பார்க்காதே, ஜாதி கேட்காதே, ஜாதியைச் சொல்லாதே' என்ற பெரியாரின் முழக்கம் இன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கையாகப் பரிணமித்துள்ளது.        


- சு.குமாரதேவன்


No comments:

Post a Comment