சென்னை, மே 5- கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 24 முதல் ஊர டங்கு அமலில் இருந்தாலும், கோயம்பேடு சந்தையில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சமூக இடைவெளியை ஒருவரும் கடைபிடிக்கவில்லை. சந்தை யில் வியாபாரிகள், தொழிலா ளர்கள், அவர்களுடன் தொடர் பில் இருந்தவர்கள் என அடுத்த டுத்து கரோனா தொற்று வேகமாக பரவியது. இதைத் தொடர்ந்து, கோயம்பேடு சந்தையை வேறுஇடத்துக்கு மாற்ற அரசு அறிவுறுத்தியது. இதன்படி, கோயம்பேடு பூ மற்றும் பழச்சந்தை மாதவரத் திற்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில், சென்னை கோயம்பேடு காய்கறிச் சந் தையும் தற்காலிகமாக இட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை, புறநகர் வியா பாரிகள் திருமழிசை சென்று காய்கறிகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமழிசையில் வரும் 7 ஆம் தேதி முதல் சந்தை செயல்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment