கொரோனா தந்த பாடம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

கொரோனா தந்த பாடம்

விரைவிற் பரவிய பதிவு (Viral)


யாருக்கு மரியாதை?


பல ஆண்கள் பரட்டைத் தலையும் தாடியுமாக இருக்கிறார்கள்.. #சலூன் கடைகள் திறக்கப்படாததால்!


வீட்டுல திடீர்னு டேங்க் மோட்டார் ஓடல கொஞ்சம் வந்து சரிசெஞ்சு தர முடியுமா? #எலக்ட்ரீசியன்களுக்கு போன் செய்கிறார்கள்!


பாத்ரூம் ஏதோ அடச்சிக்கிட்டு பைப் லீக் ஆகுது.. என்னனு வந்து பார்க்குறீங்களா? #பிளம்பிங் தொழிலாளர்களுக்கு அழைப்பு!


இன்னைக்கு ஏன் குப்பை எடுக்க ஆட்கள் வரல..? என நீங்கள் நினைத்திருப்பீர்கள்!


காய்கறிக்கடைக்குப் போனப்போ செருப்பு பிஞ்சிருச்சி.. அதை தச்சிக் கொடுக்க மாட்டாங்களா என்று சாலையோரம் #செருப்புத்தைக்கும் தொழிலாளர்களை உங்கள் கண்கள் தேடியிருக்கும்!


#வீட்டுவேலைச் செய்யும் பெண்கள் வந்தால் நல்லா இருக்குமே.. எல்லா பாத்திரங்களையும் நாமே தேய்க்க வேண்டியிருக்கே!


டூவீலர் பஞ்சர் ஒட்டவோ, ரிப்பேர் பண்ணவோ உங்களுக்கு தெரிஞ்ச #மெக்கானிக் எங்கேயாவது இருக்காங்களா சார்?


இப்படி ஊரடங்குக்கு பின்னர் நாம் பலவகையான #தொழிலாளர்களை தேடியிருக்கிறோம், நாடியிருக்கிறோம்..


ஆனால், ஒருமுறை கூட கோயில் #அர்ச்சகர்களை நாம் இந்த நாட்களில் தேடியிருக்க மாட்டோம்..


நமக்கான தேவைகளை எல்லாம் நிறைவு செய்கிற தொழிலாளர்களை #கீழ்ஜாதியாகவும்..


நமக்கு எந்த வகையிலும் பயன்படாத கோயில் அர்ச்சகர்களை #உயர்ஜாதியாகவும் இவ்வளவு நாள் நாம் கருதியிருக்கிறோம்..


#கொரானா கற்றுத் தரும் பாடம்!


No comments:

Post a Comment