பேராசிரியர் மு.நாகநாதன்
"அனைவரும் ஒன்று என அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கிவிடுவது ஆரியம்.
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், ஆணவத்தை- ஆர்ப்பரிப்பை அணுவளவும் குறைத்துக் கொள்ள மனமின்றி இருப்பது ஆரியம்.
அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு மாடு களுடன் வந்தோருக்கு வீடு வாசல் தந்து, மற்றவ ருக்குக் கேடு செய்யும் மூடமதியினைப் பீடமேற்றி யதும் ஆரியம்.
கற்பனையை ஊட்டி, கருத்திலே துலங்கும் அறிவினை ஓட்டி, பழங்குடி மக்களை வாட்டி, பார்ப் பனியம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியதும் ஆரியம்.
அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்!!
மகாதேவன் கட்டளை எனக்கூறி மயக்கும்!
மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்!!
விளைநிலத்துக் களை போலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்து விட்டதும் ஆரியமே!
தோள் தட்டி, மார்தட்டி வாழ்ந்த மறத்தமிழனை, இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழித்தொட்டிப் பட்டியில் வாழும் பாமரனாக்கியதும் ஆரியமே!
அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்து, பின்னர் அந்த அபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அந்த அபினைப் பெற வேண்டிய கேவலமான நிலைமைக்குக் கொண்டு வரப்பட்ட வர்கள் போல, ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கி விட்டது!
அண்ணாவின் ஆரிய மாயையின் ஆழமான கருத்துகளைப் பின்பற்றி- இன்றைய நீதித் துறையில், நிதித் துறையில், நிர்வாகத் துறையில், கல்வித் துறை யில் வங்கித் துறையில், பத்மா ஆடும் கலைத் துறை யில். உச்சப் பணக்காரர்களான முதலாளிகள் நடத்தும் தனியார் துறை வரை நடக்கும் வஞ்சக செயல்களை யும், அதற்குத் துணை போகும் அரசுகளும், ஆணை போடும் சனாதனத்தின் தலைமையும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா? எப்போது மீண்டும் விரட்டப்போகிறீர்கள்?
No comments:
Post a Comment