கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். அதேபோல், வேதாரண்யம் அருகே தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு, ஒரு வார காலம் ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
தந்தை பெரியாரையும், அம்பேத்கரையும் அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் எவர் என்பது காவல்துறைக்குத் தெரியும். அத்தகையவர்களை அடையாளம் கண்டு, சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
ஒரு நெருக்கடியான சூழலில், வீதிக்கு வந்து போராடுவதைத் தவிர்ப்பதைப் பலவீனமாகக் கருதக்கூடாது, எச்சரிக்கை!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.5.2020
No comments:
Post a Comment