பார்ப்பனர்களின் இடப் பெயர்வால் இந்திய நாட்டின் கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் பாதிப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 3, 2020

பார்ப்பனர்களின் இடப் பெயர்வால் இந்திய நாட்டின் கலாச்சாரத்திலும், நாகரிகத்திலும் பாதிப்பு!

'தி எகனாமிக் டைம்ஸ்‘ படப்பிடிப்பு


பார்ப்பனர்கள் இந்தியாவின் பல பகுதிகளை படையெடுத்தும், ஊடுருவியும் ஆக்கிரமித்துக் கொண்டதாக ஆங்கிலேயர்களின் குடியேற்றக் கொள்கை கருதியது சரிதானா அல்லது பல வகை களில் பார்ப்பனர்கள் இடம் பெயர்ந்து இந்தியப் பண் பாட்டை வடிவமைத்தார்கள் என்பதுதான் உண் மையா?


தேவதத் பட்நாயக் என்பவர் 'எகனாமிக் டைம்ஸ்' ஆங்கில நாளிதழில் தொடர்ந்து எழுதிவரும் கட்டு ரையாளர்களுள் ஒருவர். பொருளாதாரம், வர்த்தகம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் இவருடைய தனிச் சிறப்பு. "பிசினஸ் சூத்திரா" எனும் தலைப்பில் இவர் எழுதிய நூல் பிரபலமடைந்துள்ளது. மே 2ஆம் நாள் 'எகனாமிக் டைம்ஸ்' நாளிதழில், புலம்பெயர்ந்த பார்ப்பனர்கள் பற்றி இவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்று பிரசுரமாகி சிந்தனையாளர்களின் கவனத் தைக் கவர்ந்துள்ளது. அதன் சுருக்கம் பின்வருமாறு:


புலம் பெயர்தல் குறித்து எப்போது பேச்சு எழுந்தாலும் 3500 ஆண்டுகளுக்கு முன் இந்தியா வுக்குள் புலம் பெயர்ந்த ஆரியர்கள் நம் நினைவுக்கு வருவது வழக்கம். அரசியல் உள்நோக்கத்துடன் அதை ஆரியர்களின் படையெடுப்பு என்று பிரிட்டி ஷார் குறிப்பிட்டனர். ஆனால் மொழியியல் வல்லு நர்களும், புதைப்பொருள் ஆராய்ச்சியாளர்களும், மரபியல் நிபுணர்களும் அறிவியல் சார்ந்த விளக் கங்கள் அளித்துள்ளனர்.


அவர்களின் கணிப்பு ஆரியர்கள் மூன்று கால கட்டங்களில் மூன்று வகைகளில் இடம் பெயர்ந்து இந்தியாவில் பரவினர் என்பதே ஆகும். பல நூற்றாண்டுகளாக இந்தப் புலம் பெயர்தல் நடந்து வந்துள்ளது என்கிறார்கள் இன்றைய வரலாற்று அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும்.


இந்தியக் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வடிவமைத்தது ஆரியர்களின் ஆக்கிரமிப்பு மட் டுமே அல்ல. வேறு பல இடப் பெயர்ச்சிகள் வரலாற்று நூல்களில் இடம் பெறவில்லை. மக்களின் நினைவுத் திரைகளிலிருந்து அவை மறைந்தே போய் விட்டன எனலாம். இந்தியாவை உருமாற்றிய மூன்று முக்கிய மான இடப் பெயர்ச்சிகளைப் பற்றி இப்போது விவா திப்போம்.


கி.பி. 500 - கி.பி. 1000 ஆண்டுகளில் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த இடப்பெயர்ச்சி குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. அவை பார்ப்பனர்களின் இடப் பெயர்ச்சி. பல்வேறு ஆற்றல்களுடன் வந்தவர்கள் அவர்கள். வேதங்கள் ஓதி, யாகங்கள் நடத்தி தங்க ளுக்கு ஆதரவளித்தவர்களுக்காக பணியாற்றிய பார்ப்பனர்கள் போன்றவர்கள் அல்ல அவர்கள். இந்தப் புதிய வகை பார்ப்பனர்கள் பல கிராமங்களை உருவாக்கினர். அதன்மூலம் விளை நிலங்கள் பெருகின. மன்னர்களின் வருமானம் அதிகரித்து செல்வம் கொழித்தது. பல மன்னர்கள் பார்ப்பனர் களுக்கு அழைப்பு விடுத்து தங்கள் ராஜ்ஜியங்களில் ஆலயங்கள் நிர்மாணிக்க வைத்தனர். கிராம தேவ தைகளை புராணங்களில் இடம் பெற்ற கடவுள்களாக உருமாற்றம் செய்தனர். ஆலயங்களில் உள்ள மூல விக்கிரகங்களே கிராமங்களின் அதிபதிகள் என்பது போன்ற மாயையை ஏற்படுத்தினர். ஆலயங்கள் மூலம் வரிகள் வசூலிக்கப்பட்டன. அவை கலை, இலக்கிய, பண்பாட்டு மய்யங்களாக செயல்படத் துவங்கின.


மன்னர்களின் வாழ்வு வளம் பெற இவ்வகை பார்ப்பனர்கள் பாடுபட்டனர். சாம்ராஜ்ஜியம் விரி வடைய உழைத்தனர். வாமன அவதாரக் கதை இதற்கு ஒரு சான்று. பாலி எனும் அசுர மன்ன னிடமிருந்து நிலம் பெற்றான் வாமனன் என்ற குறிப்பு அதில் உள்ளது. பார்ப்பனர்கள் கொடையாக பெற்ற நிலங்கள் பிரம்மதேய நிலங்கள் என்று அழைக்கப் பட்டன. பார்ப்பனர்கள் குடியிருந்த நிலங்கள் அக்கிரகாரம் என்று காலப்போக்கில் உருமாறின. மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது பற்றிய குறிப்புகள் பல தாமிரப் பத்திரங் களில் இந்தியாவின் பல பகுதிகளில் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இப்படிப் பல மாநிலங்களில் மன்னர் களுக்கு தொண்டாற்றியே மெல்ல மெல்ல ஒரு பார்ப்பனக் கூட்டம் குடியேறியுள்ளது. நிலங்களை தானமாகப் பெற்ற பலப் பகுதிகளில் பார்ப்பனர்களின் இடம் பெயர்வு நிகழ்ந்துள்ளது. சமஸ்கிருத மொழியை பார்ப்பனர்கள் நாடு முழுக்க பரப்பியதும் இந்தக் காலக்கட்டத்தில் (கி.பி. 500-1000) தான்.


பார்ப்பனக் குடிப்பெயர்ச்சியின் இரண்டாவது காலக் கட்டம் கி.பி. 150-1800. இது நெசவாளர்களின் இடப் பெயர்வாகும். தக்காண மேட்டு நிலம் ஆடை கள் நெய்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. கடலோரப் பகுதிகளில் நெசவாளர்கள் அதிக அளவில் குடியேறியிருந்தனர். ஆடைகள் பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆலயப் பணிகளுக்கு இவர்கள் நெய்து வந்த உடைகள் பயன்பட்டன.


நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியவர்கள் மெல்ல மெல்ல இந்தியாவின் பல பகுதிகளில் இடம் பெயர்ந்து குடியேறினர். பருத்தி மற்றும் பட்டாடைகள் ஏராளமாக தயாரிக்கப்பட்டன. வரிச் சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்பட்ட இடங்களில் இந்த நெசவாளிகளின் இடப் பெயர்வு நிகழ்ந்தது. ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த ஆடைகளுக்குப் பெயர் பெற்ற நாடாக இந்தியா மாறியது.


இப்படி நெசவுத் தொழிலில் தலைசிறந்து விளங் கிய ஒரு குழுவினர் வர்த்தகம் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மெல்ல மெல்ல இடம் பெயர்ந்து குடியேறினர். இனி மூன்றாவது வகை இடப் பெயர்வைப் பார்ப்போம்.


துறவுக்கோலம் பூண்ட கூலிப்படையினர் போல் ஒரு குழுவினர் நாடு முழுவதும் இடம் பெயர்ந்து குடியேறியது மூன்றாவது காலக் கட்டம் கி.பி. 1500 முதல் 1800 வரை. இவர்களுக்கு அகாடாஸ் என்று ஒரு பெயர் உண்டு. காவி உடை அணிந்து நாடோடி கள் போல் திரிந்து வந்த இவர்கள் மன்னர்களுக்கும், பல செல்வந்தர்களுக்கும் அடியாட்கள் போல் செயல்பட்டு அதற்கான கூலியும் பெற்று வந்து உள்ளனர்.


ஆதரவற்ற இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து வந்த கூட்டம் இது. முகலாயப் படை யெடுப்பாளர்களிடமிருந்து இந்துக்களைக் காப்பாற்ற இவர்கள் உதவி வந்துள்ளனர். குறுநில மன்னர்களுக் குக் கூலிப்படையினர் போல் பணியாற்றிய இந்தக் குழுவினர் மெல்ல மெல்ல நம் நாடு முழுவதும் குடியேறினர்.


சுருக்கமாகச் சொல்லப்போனால் பார்ப்பனர்கள், நெசவாளர்கள், துறவுக்கோலம் பூண்ட கூலிப் படையினர் - ஆகிய மூன்று வகை மனிதர்களும் கி.பி. 500-1000; கி.பி. 1500-1800 ஆகிய இரு காலக்கட்டங் களில் இடம் பெயர்ந்து இந்தியாவின் பல மாநிலங் களில் குடியேறியுள்ளனர். இவர்களின் இடப்பெயர்ச்சி யின் பாதிப்பு நம் நாட்டின் கலாச்சாரத்திலும் நாகரி கத்திலும் காணப்படுகிறது.


வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று வகையான பார்ப்பனர்களின் இடப் பெயர்வு இந்தியாவில் நிகழ்ந் துள்ளது. காலப்போக்கில் பார்ப்பனர்கள் எப்படி யெல்லாம் நம் நாடு முழுவதிலும் குடியேறினர் என் பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


நன்றி: 'தி எகனாமிக் டைம்ஸ்‘, 


நாளிதழ், 2.5.2020


No comments:

Post a Comment