காணொலியில் கலந்து கொண்ட திராவிடர் தொழிலாளர் கழக, தொழிலாளர் அணி தோழர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 4, 2020

காணொலியில் கலந்து கொண்ட திராவிடர் தொழிலாளர் கழக, தொழிலாளர் அணி தோழர்கள்

1-.5-.2020 அன்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு காலை  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் காணொலி காட்சி மூலம் திராவிடர் தொழிலாளர் கழக, தொழிலாளர் அணி தோழர்களுடன் கலந்துரையாடினார்.


 இந்நிகழ்ச்சியை தோழர் பிரின்சு என்னாரெசு  பெரியார் தொகுத்து வழங்கினார், தோழர் சுரேஷ் தொழில்நுட்ப உதவிகளை ஒழுங்குபடுத் தினார். கூட்டம் சரியாக 11 மணி அளவில் தொடங்கியது.


முதலில் திராவிடர் தொழிலாளர் கழக அணி யின் மாநிலச் செயலாளர் மானமிகு மு.சேகர் அவர்கள் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின் அனைத்து தோழர்களும்  தங்களை அறிமுகம் செய்து கொண்டு மே தின வாழ்த்துக் கூறி தங்கள் கருத்துகளையும் கரோனா ஊரடங்கு காலத்தில் தங்களின் பணி என்ன என்பதையும் தங்கள் கருத்துகளையும் கூறினார்கள்.


அதைத் தொடர்ந்து தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றி னார்கள். அதில் மேதினம் மற்ற நாடுகளுக்கும் நமது நாட்டிற்கும்  உள்ள வேறுபாடு என்ன? என்பதை பேசுகின்ற  பொழுது மற்ற நாடுகளில் வர்க்க பேதம் இருக்கிறது. ஆனால் நம்நாட்டில் வர்ண பேதம் இருக்கிறது. வர்க்க பேதம் மாறும்; ஆனால் வர்ண பேதம் மாறாததாக கட்டமைக் கப்பட்டிருக்கிறது. அதை உடைத்து  அனைவரும் சமம் என்பதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று இந்த மே நாளில் ஆசிரியர் அவர்கள் கேட்டுக்கொண்டு தொடர்ந்து தந்தை பெரியார் அவர்களின் கருத்தை  மேற்கோள்காட்டி தொழி லாளி முதலாளி என்று இல்லாமல் பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பது குறித்து பேசினார்கள். இதில் திராவிடர் தொழிலாளர் கழக அணியின் விவசாய தொழிலாளர் அணி, போக்குவரத்து தொழிலாளர் அணி, பெல் தொழிலாளர் அணி, பெல் ஒப்பந்த தொழிலாளர் அணி, ரயில்வே தொழிலாளர் அணி, ஆட்டோ தொழிலாளர் அணி மற்றும் அனைத்து தொழிலாளர்கள் அணியினரும் கலந்து கொண்டனர்.


விவசாயத் தொழிலாளர் அணி தோழர்களிடம் தங்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தலைமைக்கு தெரிவிக்கும்படி ஆசிரியர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.


இறுதியாக பெல் ஒப்பந்தத் தொழிலாளர் பொறுப்பாளர் மானமிகு மாரியப்பன் அவர்கள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்துவைத்தார்.


திராவிடர் தொழிலாளர் கழகப் பேரவை மாநிலத் தலைவர் திண்டுக்கல் மோகன், மாநில பொதுச்செயலாளர் திருச்சி சேகர், மாநில பொருளாளர் கூடுவாஞ்சேரி ராசு, பேரவைச் செயலாளர் கருப்பட்டி சிவகுருநாதன், பேரவை செயலாளர் கும்பகோணம் குருசாமி, பேரவை துணை பொதுச்செயலாளர் ஈரோடு சிவலிங்கம், பேரவை துணைத்தலைவர் திண்டுக்கல் செல்வம், திண்டுக்கல் மண்டலத் தலைவர் பழனி அங்கப்பன், மண்டல பொதுச் செயலாளர் திண்டுக்கல் ராசேந்திரன், மாநில விவசாய அணித் தொழிலாளர் அணி ராயபுரம் கோபால், நடராசா தொழிலாளர் அணி அமைப்பாளர், தமிழ்மணி மாவட்ட தொழிலாளர் அணி தலைவர், நேதாஜி மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர், சேவியர் அமைப்புசாரா தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர், வீரமணி போக்குவரத்து துறை தஞ்சாவூர், ஏகாம்பரம் தஞ்சை மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர்.


பெல் ஒப்பந்தத் தொழிலாளர்கள்


பொறுப்பாளர்கள்:


காமராஜ், மாரியப்பன், சண்முகம், செந்தில்


திண்டுக்கல் மண்டல பொருளாளர் தங்க வேல்,


துணைச் செயலாளர் சிதம்பரம்,


துணைப் பொதுச் செயலாளர் ஜோசப் ஜேம்ஸ் ராஜ்,


திண்டுக்கல் லாசர், திண்டுக்கல் நடராசன்,


மதுரை மண்டலம்


மண்டலத் தலைவர் மதுரை ராமசாமி, பொதுச்செயலாளர் மதுரை மகேஷ், பொருளா ளர் முத்துக்கருப்பன், மதுரை சண்முகசுந்தரம், விழுப்புரம் கோபண்ணா, பெரம்பலூர் விசேந் திரன்,


நாகை  ராஜ முருகையன், டி வி ஆர் ரத்தின சாமி,


மண்ணை மதி, பிகேடி துரைராஜ், தஞ்சை வீரமணி,


தஞ்சை ஏகாம்பரம், குடந்தை காமராஜ்


பெல் திராவிடர் தொழிலாளர் கழக நிர்வாகிகள்


சுதர்சன், அசோக் குமார், திலீபன், பஞ்சலிங்கம், ஆறுமுகம், ஆண்டி ராஜ், செல்வம், கண்ணதாசன், அசோக் ராசா, கிருஷ்ணகுமார், சுப்பிரமணி, மருதை,


ஓய்வு பெற்றோர் தொழிலாளர் அணி பொதுச் செயலாளர் சிவக்கொழுந்து,


 திராவிடர் கழக தொழிலாளர் அணி தலைவர் அரியலூர் இளவரசன்,


திராவிடர் கழகம் தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் அரியலூர் குமரேசன், தொழிலாளர் அணி பொறுப்பாளர் கோவை சிற்றரசு,  தொழிலாளர் அணி பேரவைச் செய லாளர் ஈரோடு சுதாகர்,


 திராவிடர் கழக அமைப்பு சாரா தொழிலாளர் அணி சிவக்குமார்-,


ரயில்வே தொழிலாளர் நலத்துறை கணேஷ் மூர்த்தி-,


ரயில்வே தொழிலாளர் நலத்துறை அமைப் பாளர் மூர்த்தி- உள்ளிட்ட பலர் தோழர்கள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment