நமது அருமைத் தோழரும், பெரியார் - அம்பேத்கர் சிந்தனை யாளரும், மேனாள் மத்திய அரசு அதிகாரியும், மேனாள் மத்திய இணை அமைச்சரும், நமது கழக மாநாடுகளில் உரையாற்றிய வட மாநிலத் தலைவர்களின் இந்தி உரைகளைத் தமிழில் அழகாக மொழி பெயர்த்து, சீரிய பங்களிப்பு அளித்தவரும், பெரியார் திடலோடு நெருக்கமான தொடர்பு கொண்டவருமான தோழர் தலித் எழில்மலை மறைவுற்றார் என்பதறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவர் பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் உற்றார், உறவினர்களுக்கும், தோழர்களுக்கும், கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
6.5.2020
No comments:
Post a Comment