கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார் பங்கேற்பு
விருத்தாசலம்,மே.2 கரோனா பரவல் தடுப்பு நடவ டிக்கையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கிலும், இயக்க செயல்பாடுகளை, பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி களைத் தொய்வின்றி தொடர்ந்திட காணொலி வாயிலாக கழகப்பொறுப்பாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவுறுத் தியுள்ளார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழி காட்டுதலின்படி, திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான காணொலி கலந்துரையாடல் கூட்டம் 26.4.2020 ஞாயிற் றுக்கிழமை காலை 10.45 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெற்றது.
கரோனா பெருந்தொற்று வைரசால் உலகமே முடங்கி யிருக்கக்கூடிய நிலையில், உள்ளத்துக்கு முடக்கமில்லை என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்து, அதனடிப்படையில், காணொலி காட்சி வாயிலாக கழகத் தோழர்களை காணொலியில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கி வருகிறார். இதனடிப்படையில், திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பா ளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடை பெற்றது. நிகழ்சியில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை வகித்தார். கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். மாநில இளைஞ ரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் நிகழ்வை ஒருங் கிணைத்தார்.
தமிழர் தலைவர் உரை
இளைஞர்களே இயக்கத்தின் தூண்கள்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எதிர்பாராத விதமாகக் கலந்துகொண்டு இளைஞரணி தோழர்களிடம் சிறப்புரையாற்றினார். அப்போது, கரோனா வைரஸ் 42 சதவிகிதம் இளைஞர்களை பாதிப்பதால் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், நமது இயக்கத்தின் தூண்களாக இளைஞர்கள் இருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த ஊரடங்கு காலத்தை நாம் பயனுள்ள வகையில் உருவாக்கிக்கொள்ள வேண்டும். இயக்க நூல்களை படிப்பது, விடுதலை நாளிதழை படிப்பது போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான கால கட்டத் தில், பொருளாதாரம் பற்றிய புதிய சிந்தனைகளையும், அவ சியத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. தந்தை பெரியார் கூறிய சிக்கனம் பற்றியதுதான் அது. மற்ற நேரங்களைவிட தற்போது அதன் விரிந்த பொருளை நம்மிடையே ஆழமாக விதைத்திருக்கிறது. ஊரங்கு விலக்கப்பட்டாலும் நாம் இதை மறக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் உரை
பெரியார் கொள்கையே உலகாள்கிறது
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உரையாற்றும் போது, ஊரடங்கு காலத்தில், நாம் உடனடியாக நம்மால் இயன்றளவு நிவாரணங்களை வழங்க வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், விரைந்து மருந்தை கண்டறிவதே இதற்கு தீர்வாகும்.
நமது தோழர்கள் குழந்தைகளின் கல்வி தொடர்பான விவரங்களை சேகரிக்க வேண்டும். சிக்கனமாக வாழ்வதற்கு அவர்களை பழக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளோடும், வீட்டிலுள்ளவர்களிடமும் அறிவியல் அணுகுமுறைகளை சொல்லித்தர வேண்டும்.
இன்று நாம் கண்டு வரும் அறிவியல் அணுகுமுறைகள் , குறித்து இனி வரும் உலகம் எனும் நூலில் தந்தை பெரியார் அவர்கள் விளக்கிக்கூறியிருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். கம்பியில்லாத போன்கள் வரும். முகத்தை பார்த்து பேசும் சாதனங்கள் வரும் என பெரியார் கூறினார். இந்த கருத்து மெய்ப்படும் வகையில், இக்கட்டான காலகட்டத்தில் காணொலி மூலம் புதிய திறன்களோடு நடத்தி வருகிறோம். இதேபோல் மதம், கடவுள் ஆகிய நிறுவனங்கள் பயனற் றவை என உலகம் இன்று கண்கூடாகக் கண்டு வருகிறது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகள் எப்போதும் திறந்தே இருக்கின்றது.
இதன் மூலம் பெரியாரின் தத்துவங்களும், கொள்கை களுமே உலத்தை ஆட்சி செய்கிறது என்பது நிரூபன மாகியுள்ளது எனப்பேசினார்.
கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் உரை
பெரியாரின் கருத்துகளே நிலையானது:
கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் உரையாற்றும் போது, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் அறிவுரைப்படி 20-க்கும் மேல்பட்ட மாவட்டங்களில் காணொலி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இக்கட்டான இந்த காலகட்டத்தில் கூட ஆசிரியர் அவர்களின் முயற்சியினால் விடுதலை நாளேடு வாட்சப் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலமாக தொடர்ந்து வருகிறது. இவ்வாறு வாட்சப்பில் வரும் விடுதலை நாளிதழை படித்து 2000 பேருக்கு மேல் பகிர்ந்து வருவதாகக் கூறினார்.
கழகத் தோழர்களோடு கைப்பேசியில் பேசி வருவ தாகவும், அனைத்து மாவட்டுஇளைஞரணி பொறுப்பாளர் களோடும் பேசவுள்ளதாகக் கூறினார். மேலும், கோயில்கள் முதலிய வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டுள்ளதையும், கோயில்களுக்குச் செல்லாமலேயே மக்கள் இயல்பான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன் தந்தை பெரியாரின் கொள்கை நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதேபோல், திருமணத்தில் 50 பேருக்கு மேல் கூடுவதை கிரிமினல் குற்றமாக அறிவிக்க வேண்டும் என்றார் பெரியார். ஆனால், இன்று அரசாங்கமோ 20 பேர் தான் கூட வேண்டும் எனவும், அதற்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது.
இதன்மூலம் பெரியாரின் கருத்துதான நிலையானது என்பது நிரூபனமாகியுள்ளது எனத்தெரிவித்தார்.
மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் கூட்டத்தை ஒருங்கிணைத்து வரவேற்புரையாற்றினார். அப்போது, கழக இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழர் அறிவித்ததன் அடிப்படையில், விருத்தாசலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தாம்பரம், வடசென்னை, தென்சென்னை, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞரணியினர் கழகத் தோழர்களோடு இணைந்து வழலைக்கட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கி ஏற்படுத்தினர். தொடர்ந்து இளைஞரணி சார்பில், வாய்ப்புள்ளோர் ஏழை எளிய மக்களுக்கு தற்போதும் உதவி வருகின்றனர் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்துள்ள 21 கட்டளை களை செயல்படுத்த வேண்டும் எனப்பேசினார்.
இதனைத்தொடர்ந்து மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா. வெற்றிக்குமார் பேசும்போது, கரோனா தொற்று வரமால் தடுக்க வழலைக்கட்டிகள் போன்ற கிருமிநாசினிகளைக் கொண்டு கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும் என மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது. இத னடிப்படையில், கிராமப்புற எளிய மக்களுக்கு வழலைக் கட்டிகள் போன்ற நச்சுக்கொல்லிகளை இளைஞரணி, மகளிரணி சார்பில் வழங்க வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்தார்கள். இதன்படி தஞ்சாவூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்களுக்கு வழலைக் கட்டிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது எனவும், தஞ்சாவூர் நகரில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் கழக இளைஞரணி சார்பில் மூன்றடுக்கு முகக்கவசம் வழங்கப் பட்டது எனத் தெரிவித்தார். மேலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கரோனா காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் கூறியுள்ள கட்டளைகளை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈரோடு தே.காமராஜ் பேசும்போது, ஈரோடு மாவட்டத்தில் கழக இளைஞரணி சார்பில் சோப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட போது, வைரஸ் தொற்று அதிகம் இருப்பதால் பிறகு வழங்கலாம் என காவல் துறை வேண்டுகோள் விடுத்ததின் பேரில், அந்நிகழ்வு நிறுத்திவைக்கப்பட்டது எனவும், ஈரோடு பகுதியில் வைரஸ் தொற்று அதிகமிருப்பதால், தோழர் களோடு அடிக்கடி கைப்பேசியில் பேசிவருவதாகவும், இயக்க ஏடுகளை முழுமையாகப் படிப்பதற்கு வாய்ப்பாக இருப்பதாகத் தெரிவித்தார்.
மாநில இளைஞரணி துணைச்செயலாளர் பொன்னம ராவதி ஆசைத்தம்பி பேசும்போது, வீட்டிலேயே சிறைபட்டி ருக்கக்கூடிய இந்தகாலகட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நம்மிடம் நாள்தோறு விடுதலை வாயிலாக பேசிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. கரோனா பாதிப்பு குறித்து ஆசிரியர் அவர்களின் அறிக்கைகளும், விடுதலையில் வரும் செய்திகளும் நமது அச்சத்தைப்போக்கி, புதிய நம்பிக்கை ஊட்டிவருகிறது. நெருக்கடியான இந்த காலகட்டத்தில் தோழர்கள் முகம் பார்த்து பேசுவது உள் ளத்துக்கு புத்தபணர்ச்சி அளிக்கிறது எனத்தெரிவித்தார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆத்தூர் சுரேஷ் பேசியதாவது: கரோனா நோய் காலத்தில் மற்ற வர்களெல்லாம் வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் நேரத்தில நமது இயக்கம் மட்டும் தான் வழக்கமான பணிகளை அறிவியல் சாதனங்கள் மூலம் செய்து வருகிறது. தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா இடுகின்ற பணிகளை செய்து முடிப்போம் எனத்தெரிவித்தார்.
பெரியார் சமூகக்காப்பணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ் பேசும்போது, நெருக்கடியான இந்த நேரத்தில் கழக இளைஞரணியினர் அந்தந்த பகுதியில் உள்ள இளைஞரணி தோழர்கள், கழகப் பொறுப்பாளர்களுடன் பேச வேண்டும். சமூக வலைதளங்களில், நமது இயக்கம் தொடர்பாக எதிர்மறையாக வரும் கருத்துகளுக்கு உடனுக்குடன் மறுப்பு தெரிவிக்க வேண்டும். விடுதலையில் வரும் கழகம் சார்ந்த கருத்துகள் சிறு குறிப்புகளாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் எனத் தெரிவித்தார்.
சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி பேசும்போது, கரோனா பலருக்கும் ஓய்வளித் திருக்கும் இந்த காலத்தில், நான் பெரியார் மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் புத்தகங்களைப் படித்து வருகிறேன்.
மேலும், நமது தோழர்கள் சுரேஷ், தளபதி பாண்டியன் போன்றோர் பொருளாதாரம் இன்றி மிகவும் வருமையில் வாடும் ஏழை எளிய மக்களை கண்டறிந்து அவர்களுக்கு ஏதேனும் உதவ வேண்டும் எனக்கூறினார்கள். அதனடிப் படையில் அந்த வடசென்னை பகுதியில் உள்ள 300-க்கும் மேல்பட்ட குடும்பங்களுக்கு உதவியதாகத் தெரிவித்தார்.
தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜ வேல் பேசும்போது, கரோனா பரவலை தடுக்கும் பணியில் கிராம ஊராட்சிகளோடு இணைந்து பணியாற்றி வருகிறோம். இந்த சூழலில் இயக்கத்தின் கருத்துகளை சமூக வலை தளங்களில் பரப்புவதற்கு வாய்ப்பாக இருப்பதாகவும், இதே போன்று மாவட்ட, ஒன்றிய, கிளைக் கழகக் கலந்துரை யாடல்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடத்த வேண்டும் என கூறினார்.
திருச்சி மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் அன்புராஜா, தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம் ஆகியோர் பேசும்போது, கிராமப் புறங்களில் பொதுமக்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களிடன் கரோனா பாதிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் தொடர்புடைய பணிகளில் ஈடுபட் டுள்ளதால் நமது கொள்கைகளை பக்குவமாக எடுத்துச் சொல்வதற்கு வாய்ப்பாக இருப்பதாகத் தெரிவித்தனர்.
கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் ந.பஞ்சமூர்த்தி பேசும் போது, தங்கள் தோட்டத்தில் வேளாண் பணியாற்றியவர்களுக்கு ஊதியத்துடன் 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியதாகவும், மேலும், ஊரடங்கு நீட்டிக்கப்பட் டால் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும், மாவட் டத்தில் உள்ள அனைத்து தோழர்களிடத்திலும் கைப்பேசி யில் தொடர்புகொண்டு பேசிவருவதாகக் கூறினார்.
கோவை மண்டல இளைஞரணிசெயலாளர் வெள்ளலூர் பிரபாகரன், காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர் தி.இளந்திரையன் ஆகியோர் பேசும்போது, விடுதலையில் வெளிவரும் ஆசிரியர் அய்யா அவர்களின் அறிக்கைகளை முகநூல் உள்ள சமூக வலைததளத்தில் பரப்பி வருவதாகவும், தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் கருத்துகளை படத்துடன் வடிவமைத்து வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
புதுச்சேரி இளைஞரணி தலைவர் தி.இராசா, ஈரோடு மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்ல துரை, மதுரை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.அழகர் ஆகியோர் பேசும்போது, தந்தை பெரியார் சிந் தனைகளை குழந்தைகளிடமும், வீட்டிலுள்ளவர்களி டமும் எடுத்துச்சொல்வதற்கு வாய்ப்பாக இருக்கிறது. விடுதலை நாளிதழை நாள்தோறும் வாட்ஸப்பில் படிப்பதோடு மட்டு மல்லாமல், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வருகிறோம் எனத்தெரிவித்தனர்.
வீட்டிலேயே முடங்கிக்கிடந்தாலும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் இளைஞர்களுக்கு வழங்கிய அறிவுரை களை செயல்படுத்தி வருகிறோம் எனத்தெரிவித்தனர்.
வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், கடலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் உதயசங்கர், அரியலூர் மாவட்ட இளைஞரணித் தலைவர் சு.அறிவன், கும்பகோணம் மாவட்ட இளைஞரணித் தலைவர் சிவகுமார், தேனி மாவட்ட இளைஞரணித் தலைவர் சுருளிராஜன் ஆகியோர் அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும், வாய்ப்புள்ள வர்களைத் தொடர்புகொண்டு ஏழை எளிய மக்களின் விவரங்களை கூறி அவர்களின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர் களின் வாழ்விணையர் ஜெகதாராணி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பொழிசை கண்ணன், நெல்லை மண்டல இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன், தஞ்சாவூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ந.வெங்கடேசன், வடசென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவசீலன், விருதுநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் ச.சுந்தரமூர்த்தி, தென்காசி மாவட்ட இளைஞரணி தலைவர் கோபால், கரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் செகந்நாதன், மாவட்ட அமைப்பாளர் கார்த்தி, விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி, திரு வாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜமணிகண்டன், மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் முத்துக் கருப்பன், மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபாகரன், தேனி மாவட்ட இளைஞரணி செயலாளர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:
இரங்கல் தீர்மானம்:
பெரியார் பெருந்தொண்டர் விருகம்பாக்கம் நாதன் (83), ஏப்.7, பெரியார் பெருந்தொண்டர் திருச்சி தமிழ்மணி, முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காவேரிப்பட்டிணம் த.திருப்பதி (88) ஏப்.15, முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் நத்தம் நாத்திகர் சி.பி.கண்ணு (92), ஏப்.18, பட்டீஸ் வரம் இரா.கலைவாணி (62), ஏப்.7, தென்காசி மாவட்ட மேனாள் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சீ.தங்கதுரை அவர்களின் வாழ்விணையர் புஷ்பாராணி (71), ஏப்20, குன்னூர் மகளிரணி பொறுப்பாளர் ஜோதிமணி கருணாகரன் அவர்களின் தாயார் க.வள்ளியம்மாள் (74) ஏப்.17, நெய்வேலி நகர திராவிடர் கழகத் தலைவர் இசக்கிமுத்து அவர்களின் தாயார் லட்சுமியம்மா (74) ஏப்.22 ஆகியோர் மறைவுக்கும்,
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கட்ட மக்களுக்கு சிகிச்சையளித்து உயிரிழந்த மருத்துவர்களுக்கும், உலகம் முழுவதும் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், அவர்களின் குடும்பத் தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 2:
திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு
அரியலூரில் மே 2 ஆம் தேதி நடைபெறுவருவதாக அறிவிக்கப்பட்டிருந்த திராவிடர் கழக இளைஞரணி மாநில மாநாடு கரோனா பெருந்தொற்று காரணமாக கால அறிவிப் பின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு கட் டுக்குள் வந்தவுடன் தலைமைக் கழகம் அறிவிக்கும் நாளில் மாநாட்டை சிறப்பாக நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 3:
21 கட்டளைகளை செயல்படுத்துவோம்
கரோனா பெருந்தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் கழகத் தோழர்கள் தாங்கள் எப்படி நேரத்தை ஒழுங்குபடுத்துவது, குழந்தைகளுக்கு ஒழுக்க நெறியைக்கற்றுக்கொடுப்பது, கழகத் தோழர்கள், அரசியல் கட்சியினரின் கைப்பேசி எண் மற்றும் முகவரிகளை திரட்டுதல், கழக வெளியீடுகள், புத்தகங்களை படிப்பது மற்றும் குறிப்பெடுப்பது, எதிர்கால பணிகளை திட்டமிடுதல், பொருளாதார சிக்கனத்தை கடைபிடிப்பது, கழகத் தோழர்களுடன் கைப்பேசி மூலம் உரையாடுவது மற்றும் வீட்டிலேயே உடல்பயிற்சி மேற் கொள்வது உள்ளிட்ட வாழ்வியல் தத்துவங்களை நமக்கு வழங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன் றியைத் தெரிவிப்பதுடன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஊரடங்குகால பணிகளாக வகுத்தளித்த 21 கட்ட ளைகளை செயல்படுத்துவது எனத்தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4:
விடுதலை நாளிகழுக்கும் ஆசிரியருக்கும் நன்றி
உலகமே அஞ்சக்கூடிய கரோனா தொற்று பரவல் காலத்தில் இயக்கத்தின் ரத்த ஓட்டமான விடுதலை நாளிதழை எவ்வித தடங்களுமில்லாமல் தொடர்ந்து நடத்தி கரோனாவிலிருந்து தப்புவது எப்படி என அறிக்கைகள், வாழ்வியல் சிந்தனைகள், தலையங்கம், பல்துறை அறி ஞர்கள் மற்றும் மருத்துவர்களின் கட்டுரைகள் மூலமாக கழகத் தோழர்களுக்கும், விடுதலை வாசகர்களுக்கும், உல கெங்கும் வாழக்கூடிய தமிழ்ப்பெருமக்களுக்கும் உத்வேகத் தையும், மத்திய, மாநில அரசுகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி வரக்கூடிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 5:
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி
கரோனா தொற்றின் இக்கட்டான காலகட்டத்தில் கழகத் தோழர்களோடு கைப்பேசியிலும், காணொலி காட்சி மூலமாக தொடர்புகொண்டு பேசி, கழகத் தோழர்களுக்கு உற்சாகத்தையும், இக்கட்டான சூழலை கையாளும் ஆக்கப் பூர்வ வழிமுறைகள் குறித்து உரையாற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 6:
மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு நன்றி
கரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தங்கள் குடும்பத்தையும் மறந்து உயிர்காக்கும் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியா ளர்கள் மற்றும் தன்னார்வளர்களின் மனிதநேயப் பணிக்கு இக்கூட்டம் தலைவணங்கி நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் 7:
உலகாளும் பெரியார் கொள்கை
21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைநோக்கோடு அறி வித்து அதற்காக உலகம் முழுவதும் பல்வேறு கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி பெரியாரை உலகமயமாக்கினார். மேலும், கரோனா பெருந்தொற்று காலத்தில் பெரியார் கொள்கை உலகை ஆள்வதை கண்கூடாகக் காணமுடிகிறது. உலகம் முழுவதும் மதநிறுவனங்கள் தங்கள் தேவாலயங் களையும், மசூதிகளையும், கோயில்களையும் மூடி, வழிபாட்டுத் தலங்களுக்கு வரவேண்டாம் என கூறியுள்ளன. பலலட்சம் செலவில் கிராமங்கள் முதல் பெருநகரங்கள் வரை நடைபெறக்கூடிய திருவிழாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களும் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதை நிறுத்தி யுள்ளனர். இதன்மூலம் மதம், கடவுள் ஆகிய கற்பனைகள் பொய்யான புரட்டு என நிரூபனமாகியுள்ளது.
மேலும், தந்தை பெரியார் அவர்கள் திருமண நிகழ் வுகளை சிக்கனமாகவும் 50 பேருக்கு மேல் கூடினால் அதனை கிரிமினல் குற்றமாக்க வேண்டுமென கூறினார்கள். இன்று அரசாங்கம் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 முதல் 30 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டுமெனவும், அதற்கு மேல் கூடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதேபால், தந்தை பெரியாரின் கருத்துகள் பெரும்பாலான திரைப்படங்களில் கதைக் களமாக உருவாகி வருகிறது. அவையே பேசுபொருளாகவும் உள்ளது. மேலும், இனிவரும் உலகம் எனும் நூலில் தந்தை பெரியார் அவர்கள் கம்பியில்லாத போன் வரும் என்றும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்து பேசும் கருவிகள் வரும் என அறிவித்தார். இன்று உலகத்தில் பலத்தரப்பினரும் காணொலி காட்சி வாயிலாக பேசிவருகின்றனர். இதேபோல், நோயால் பாதிக்கப்பட்ட மக்களை கடவுள் காப்பாற்றாது மனிதர்களால் தான் காப்பாற்ற முடியும் என்ற உண்மையை மனிதர்கள் உணர்ந்து வருகின்றனர். மனிதர்களால் தான் மனிதர்களை காக்க முடியும் என்பத உணர்த்தக்கூடிய வகையில் மருத்துவர்கள் கண்துஞ்சாமல் பணியாற்றி மருந் துகளை கண்டுபிடித்து வருகின்றனர். இந்த உண்மையை இளைஞர்கள் மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப் பினரும் உணர்ந்து வருகின்றனர். எனவே, இந்நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டு என்பது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று பரவல் கட்டுக் குள் வந்தவுடன் கழக இளைஞரணி சார்பில் இத்தீர்மானத்தை விளக்கி தமிழகம் முழுவதும் பகுத்தறிவு பரப்புரை நடை பெறும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தின் நிறைவில் கோவை மண்டல இளைஞரணி செயலாளர் வெள்ளலூர் ஆ.பிரபாகரன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment