அரசு மருத்துவர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து 118 மருத்துவர்கள் வெவ்வேறு ஊர்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இட மாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்களை பழைய இடத்திற்கே மீண்டும் மாற்றம் செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு அதை மதிக்காத நிலையில்,
மருத்துவர்கள் சங்கம் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில், உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கரோனா கடுமையாக இருக்கும் இந்த நேரத்தில்கூட அரசு இவ்வளவுக் கடுமையாக இருக்கலாமா?
அ.தி.மு.க. தொண்டர்
தி.மு.க. தலைவருக்குக் கடிதம்
ஒன்றிணைவோம் வா! தி.மு.க. திட்டத்தின்கீழ் ஈரோட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. தோழர் தங்கராஜ் உதவி பெற்றார். அவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் குறித்து 'டுவிட்டர்' பக்கத்தில் தி.மு.க. தலைவர், 'நெஞ்சை நெகிழ வைக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
எச்சரிக்கை!
உலகில் கரோனா பாதிப்பு 34,46,046. உயிரிழப்பு 2,42,648.
இந்தியாவில் பாதிப்பு 39,980. உயிரிழப்பு 1301
தமிழ்நாட்டில் பாதிப்பு 2757. நேற்று ஒரு நாள் பாதிப்பு 231. உயிரிழப்பு 29.
சென்னையில் பாதிப்பு இதுவரை 1257. நேற்று மட்டும் 174. அய்ந்து நாள்களில் பாதிப்பு 685.
காவல்துறையினர் பாதிப்பு 6 பேர்; கோயம்பேடுவில் இருந்து வந்த 700 பேர் கடலூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment