* சொந்த ஊருக்குச் செல்ல இணைய தளத்தில் பதிவு செய்யலாம். பிற மாநிலங்களிலிருந்து வருவோர்க்கு (nonresidenttamil.org) இந்த இணைய தளத்தில் ‘Return to Tamilnadu' என்ற படிவம் பச்சை நிற பொத்தான் வழியாக பதிவு செய்யலாம்.
* சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணிபுரியும் 2 பேர் உள்பட 21 போலீசாருக்குக் கரோனா பாதிப்பு.
* செய்தித்தாள் துறைக்கு உரிய நிவாரண நிதி வழங்கப்படாவிட்டால், இத்துறை ரூ.15 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்திக்க நேரிடும் என்று இந்திய செய்தித்தாள் சங்கம் தெரிவித்துள்ளது.
* டில்லி தென்மேற்கு கபாஷெரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் 41 பேருக்குக் கரோனா.
* புதிய வைரஸ் தொற்று மூலம் ஆஸ்திரேலியாவில் வானில் பறந்துகொண்டு இருக்கும்போதே கிளிகள் திடீரென இறந்து பூமியில் விழுகின்றனவாம்!
* சென்னையில் வீட்டு வேலை செய்பவர்கள் அனுமதிச் சீட்டை, வீட்டு உரிமையாளர்கள் விண்ணப்பித்துப் பெறவேண்டும் என்று மாநகராட்சி அறிவிப்பு.
* அய்க்கிய அரபு எமிரேட்சில் பணிபுரிந்து வரும் ஒன்றரை லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
* ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இராணுவ மேஜர், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் உள்பட அய்வர் மரணம்!
* கரோனா தொற்று தொடங்கிய மார்ச் 19 முதல் மே 2 வரை இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டோர் 338.
* பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2500 கோடி கிடைக்குமாம்.
* சென்னையில் 232 சுகாதார ஆய்வாளர்கள் தேவை - இருப்பதோ வெறும் 108 பேர்.
* வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களை அழைத்துவர ஒரு கோடி ரூபாய் காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு மாநிலக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு.
* காஞ்சிபுரம், செங்கற்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 விழுக்காடு தொழிலாளர்களுடன் இயங்க தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி.
* மேட்டூர் அணையை முன்கூட்டியே திறக்க விவசாயிகள் கோரிக்கை.
* இயற்கைப் பேரிடர்கள், வன்முறைகளால் இந்திய அளவில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் உள்நாட்டு அளவில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சம்.
* நிதிநிலை வெளிப்படைத் தன்மை என்பதில் இந்தியாவுக்கு 53 ஆம் இடம்; முதலிடம் நியூசிலாந்து.
* கரோனாவால் சிங்கப்பூரில் பாதிப்புக்கு ஆளான இந்தியர்கள் 4800.
No comments:
Post a Comment