மனிதம் காக்கும் மருத்துவம்
மானம் காக்கும் ஆடை
அறிவை வளர்க்கும் அறிவியல்
ஆற்றல் அளிக்கும் கல்வி
அண்டம் வியக்கும் அணு
அணுவைப் பிளக்கும் ஆற்றல்
வானில் பறக்கும் வானூர்தி
விண்ணில் பாயும் ராக்கெட்
மண்ணில் பாயும் ஆழ்குழாய்
கடலில் பயணிக்கும் கப்பல்
கண்டம் தாண்டும் ஏவுகணை
இருளை அகற்றும் மின்சாரம்
உலகை உலுக்கும் அணுகுண்டு
உழவுத்தொழிலின் இயந்திரம்
உணவைப் படைக்கும் விவசாயம் - என
காணக் கிடைக்கும் காட்சி
காட்சி படைக்கும் மாட்சி
மாட்சி அளிக்கும் மாற்றம்
மாற்றம் கொடுக்கும் உழைப்பு
உழைக்கும் தொழிலாளி இனி
8 மணிநேரம் மட்டுமே
உலகெங்கும் உழைத்திடல் வேண்டும்
என்ற தொழிலாளர்களின் போராட்டம்
அமெரிக்காவின் சிகாகோ நகரில்
1866 மே முதல் நாள் வெடித்தது
ஆதிக்கக் கூட்டம் அதிர்ந்தது
போராட்டம் வெற்றியில் முடிந்தது
தொழிலாளர் நாள் மலர்ந்தது
அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள்!
-அதிரடி க.அன்பழகன்
No comments:
Post a Comment