குடியாத்தம் பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 5, 2020

குடியாத்தம் பகுதியில் கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள்


குடியாத்தம்,மே 5, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நடைமுறைப்படுத்தப் பட்டுள்ள ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த எளிய மக்களுக்கு குடியாத்தம் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் தோழர்கள் தொடர்ச்சியாக நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். குடியாத்தம் பகுதி கழகத் தோழர்கள் சார்பில் 29.4.2020 புதன்கிழமை அன்று மாலை 4 மணியளவில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.


கழகக் குடுமபத்தினர் சார்பில் இந்துஜா புவியரசு (சென்னை) ரூ.2000, செல்வி செல்வம் ஓசூர் ரூ.2000,  ஓவியா அன்புமொழி மோகன் ராஜ் சென்னை ரூ.1000,மின்வாரிய தோழர்கள் சார்பில் இரவிச்சந்திரன்.ரூ.1000, என்.பழனி ரூ.1000, குமரவேல் ரூ.1000, கே.இரவிச்சந்திரன் ரூ.2000, வெங்கடேசன் ரூ.500, உமாபிரியா ரூ.1000, நீலகண்டன் சென்னைரூ.1000, முரளி எலக்ட்ரீசியன் 25 கிலோ அரிசி என தோழர்கள் வழங்கிய பணத்தில் ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி வீதம் 60 குடும்பங்களுக்கு குடி யாத்தம் பெரியார் அரங்கில் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு நிவாரண உதவிகளை வழங்கிய தேன்மொழி, அன்பரசன், லதா, சிவக்குமார், உஷாநந்தினி, இரவிக்குமார் ஆகியோருக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.


No comments:

Post a Comment