தொழில் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய
வழிகாட்டு முறைகளை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை
சென்னை, மே 4 ஊரடங்குக் கட்டுப் பாடுகளில் தளர்வு செய்துள்ள தமிழக அரசு, தொழில் நிறுவனங் கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. இதை மீறுவோர் மீதும், நட வடிக்கை எடுக்காத அரசு அதி காரிகளின்மீதும் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
ஊரடங்கு மே 17 ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்குக் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை தமிழக அரசு நேற்று முன்தினம்அறிவித்தது.
இதுகுறித்து அரசாணையில் கூறியிருப்பதாவது:
தொழிற்சாலைகளை மீண்டும் தொடங்கும்போது கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வருமாறு:
நோய்த் தொற்றுத் தடுப்புப் பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர் கள் பணிபுரிய அனுமதிக்கக் கூடாது.
நாள்தோறும் நோய்த்தொற்று தடுப்புப்பகுதி விவரங்களை மாவட்ட ஆட்சியரிடம் பெற்று அதை தொழிற்சாலை நுழைவு வாயிலில் அனைவருக்கும் தெரியுமாறு வைக்கவேண்டும். மருத்துவ ரீதியில் தகுதி பெற்ற தொழிலாளர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுகிறார் கள் என்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
தொழிற்சாலைகளில் பணியைத் தொடங்கும் முன்பு பின்பற்ற வேண்டியவை விதிமுறைகள்:
பணிக்கும் வரும் தொழிலாளர் கள், வீட்டில் இருந்து புறப்படு வதற்கு முன்பாக தங்களை சுயமாக பரி சோதனை செய்துகொள்ள வேண் டும். இருமல், சளி, காய்ச்சல் இருக்கும் பணியாளர்கள் மருத் துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
55 வயதுக்கு மேற்பட்ட பணி யாளர்களை முற்றிலும் பரி சோதனை செய்வதுடன் அவர் களை வீட்டில்இருந்து பணிபுரிய அனுமதிக்கலாம். பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிக்குச் செல்லும் போதும், திரும்பும்போதும் கண் டிப்பாக நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையை அணிந் திருக்க வேண்ம். கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.
200 பணியாளர்கள் வரை பணி யாற்றும் தொழில் நிறுவனங்களில் தொலைப்பேசியில் அழைத்தால் மருத்துவர் உடனடியாக வரக் கூடிய ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். 200 முதல் ஆயிரம் பேர் பணியாளர்கள் வேலைபார்க்கக் கூடிய நிறுவனமாக இருப்பின் அங்கு 2 நாள்களுக்கு ஒருமுறை உள்ளூர் மருத்துவர் வந்துசெல்ல வேண்டும்.
1,000 பேருக்கு மேற்பட்ட பணி யாளர்கள் இருந்தால் அந்நிறுவ னத்தில் மருத்துவ சிகிச்சை அளிக் கும் வசதி செய்யப்பட்டிருப்பதுடன் நாள்தோறும் மருத்துவர் வந்து செல்ல வேண்டும். வெளியிடங் களில் இருந்து வரும் பணியாளர் களுக்கு நிர்வாகம் சிறப்புப் போக்கு வரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வாகனத்தில் மொத்த இருக்கை களில் 50 சதவிகித இருக்கையில் பணியாளர்கள் நன்கு இடைவெளி விட்டு அமர வேண்டும்.
நிறுவனத்துக்கு வரும் ஒவ் வொருவரையும் அவர்கள் வரும் போதும் திரும்பிச் செல்லும் போதும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும்.
பணியாளர்கள் நிறுவனத்துக்கு வரும்போதும், பணிமுடிந்து செல்லும்போதும் கண்டிப்பாக கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும். நிறுவனத்துக்கு வந்துசெல்லும் ஒவ்வொருவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.
நிறுவன வளாகத்தை தினமும் காலையிலும், மாலையிலும் 2 முறை கிருமி நாசினி கொண்டு சுத் தப்படுத்த வேண்டும். கேன்டீன் களில் எப்போதும் சமூக இடை வெளி பின்பற்றப்பட வேண்டும்.
மின்தூக்கிகளில் உடல் பரு மனுக்கு ஏற்ப 2 அல்லது 4 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்கக்கூடாது.
கட்டுமானப் பணியைப் பொறுத்தவரை தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் இருந்து யாரும் வேலைக்கு வர அனுமதிக்கக்கூடாது. வேலைக்கு வருவோருக்கு காய்ச்சல் இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.
அடிக்கடி கை கழுவுதலும், முகக் கவசம் அணிவதும் கட்டா யம். கட்டுமானப் பணியை எவ் வாறு பாதுகாப்புடன் மேற் கொள்ளவேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக போதிய அளவு கண்காணிப்பாளர்களை நியமிக்க வேண்டும்.
அனைத்துப் பகுதிகளிலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். கட்டுமானப் பணி நடைபெறும் இடத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கப்பட வேண்டும். குட்கா, புகையிலை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.
கரோனா வைரஸ் உறுதி செய் யப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அவரது குடும்பத்தினர், அவருடன் தொடர்பில் இருந்த வர்களுக்குப் பரிசோதனை செய்து, அவர்களை வீட்டுக் கண்காணிப் பிலோ அல்லது அரசு கண்காணிப் பிலோ வைக்க வேண்டும். அப் பகுதியை பாதுகாக்கப்பட்ட பகு தியாக அறிவித்து கண்காணிக்க வேண்டும்.
மேற்கண்ட விதிமுறைகளை மீறுவோர் மற்றும் விதிமுறை மீறல்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகள் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment