தமிழக அரசு விளக்கம்
சென்னை, மே 3 கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வு எதுவும் இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்த நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக வெளியிடப் பட்டுள்ள இந்த ஊரடங்கில் மத்திய அரசு, கரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இடங்களில் சில தளர்வுகளை அறிவித்தது. இதையடுத்து, நேற்று தமிழக அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக் கப்படுவதாகவும் கரோனா பாதிப்புக் குறைவாக உள்ள இடங்களில் எவற்றுக் கெல்லாம் தளர்வுகள் உண்டு என்பது பற்றியும் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி தரப்பில் விரிவான அறிக்கை வெளியிடப்பட்டது.
தமிழக அரசு விளக்கம்
இந்த நிலையில், கட்டுப்பாட்டு பகுதி களில் எந்தத் தளர்வுகளும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நோய்த் தொற்றின் அளவு மற்றும் தன்மை அடிப்படையில், மத்திய அரசால் மாவட்டங்கள் சிகப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்பாடு செய்யப்பட்டு, அதற்கு ஏற்றாற்போல தளர்வுகளை அனுமதித் துள்ளது. இதன்படி, சிவப்பு மாவட்டப் பகுதிகளுக்கும் சில தளர்வுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே, நோய் தடுப்பு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு நிற மாவட்ட பகுதிகளுக்கு மத்திய அரசால் அனுமதிக் கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு தொழிற்சாலைகள் தொடங்குவது உள் ளிட்ட தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.
அதிக தளர்வுகள்
வழங்கப் டவில்லை
இந்த தளர்வுகள் மத்திய அரசு அனுமதித்துள்ள தளர்வுகளுக்கு உட்பட்டு எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி காவல் கண் காணிப்பு எல்லைகளுக்கு மட்டும், அமைச்சரவை கூட்ட முடிவின் படி ஏற்கெனவே முதலமைச்சர் வெளியீட்டில் தெரிவித்தபடி அதிக தளர்வுகள் வழங்கப் படவில்லை.
எனவே, இந்தத் தளர்வுகள் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மாவட்ட நிற வகைப்பாடுகள் இன்றி அனைத்திற்கும் பொருந்தும் வகையில் முடிவு செய் யப்பட்டுள்ளது என்றும் நோய் கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் எந்தத் தளர்வும் வழங்கப்படவில்லை எனவும் தெளிவு படுத்தப்படுகிறது'' என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment