கிருட்டினகிரி, மே 6 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலின் படி, கிருட்டினகிரி மாவட்டக் கலந்துரை யாடல் கூட்டம் காணொலி வழியாக 26.4.2020அன்று மாலை நான்கு மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தா.அறிவரசன் அனைவரையும் வரவேற்றார். கழகத் துணைத் தலைவர் கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்கள் பங்கேற்று மறைந்த சுயமரியாதைச் சுடரொளி காவேரிப்பட்டிணம் தா.திருப்பதிக்கு வீரவணக்கத்தை செலுத் தினார். தொடர்ந்து அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் தொண்டால் விளைந்த பயன்களையும், பார்ப்பன சூழ்ச்சிகளை முறியடித்து பெற்றுத்தந்த உரிமை களையும், அய்யா, அம்மா மறைவுக்கு பிறகு வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வறியா பேருழைப்பால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தமி ழர்கள் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மண்டல்குழு பரிந்துரையால் பயன்பெற்று உயர்ந்து வருவதையும், விளக்கி 45,நிமிடம் கருத்துரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாநில அமைப்புச்செயலாளர் ஊமை.செய ராமன், மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மண்டலச் செய லாளர் கோ.திராவிடமணி, மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவர் ஈ.லூ யிஸ்ராசு, பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் சி.சுப்ரமணியம், மண்டல இளைஞரணித் தலைவர் வ.ஆறுமுகம், கிருட்டினகிரி ஒன்றியத்தலைவர் த.மாது, காவேரிப்பட்டிணம் ஒன்றியத்தலைவர் சி.சீனிவாசன், மேனாள் ஒன்றியச் செயலாளர் எல்.அய்.சி.மனோகர், மாவட்ட இளைஞரணித் தலைவர் வே.புகழேந்தி, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் செ.ப.மூர்த்தி, இளை யராசா, சோதிபாசு, பகுத்தறிவாளர் கழக ஒன்றியத் தலைவர் வெங்கடாசலம், பகுத்தறிவாளர் கழக ஒன்றியத் துணைத் தலைவர் நா.சதீசுகுமார், பர்கூர் ஒன்றிய அமைப்பாளர் க.ஞானசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தார்கள் நிறைவாக கிருட்டினகிரி நகர செயலாளர் தங்கராசன் நன்றி கூறினார். நிகழ்வை மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டியன் நெறிப்படுத் தினார்.
புத்தக முன்திவு
உலகப் புத்தக நாளை முன்னிட்டு, வணக்கத்திற்குரிய தமிழர் தலைவர் அவர்கள் விடுத்த அறிக்கையினை ஏற்று ரூ.1.500/க்கு உரிய தொகுப்பினை தா.அறிவரசன்-1, கா.மாணிக்கம்-1, ஈ.லூயிசுராசு-1, சி.சுப்ரமணியன்-1, வ.ஆறுமுகம்-1, க.ஞானசேகரன்-1, தங்க ராசன் -ரூ.500, நா.சதீசுகுமார்-ரூ.200/, மாது-ரூ.200, தொகைக்குரிய புத்தகங் களுக்கு பதிவு செய்துகொண்டனர்.
No comments:
Post a Comment