அண்ணல் அம்பேத்கர் பெயர் பற்றிய பொய்க் கதைக்கு மறுப்பு நூல். நாம் அனைவரும் படித்துப் பரப்ப வேண்டிய நூல் 'கழுவப்படும் பெயரழுக்கு'
* "அம்பேத்கர்" என்ற பெயர் அவரின் ஆசிரியர் பெயர்., அவர் "பார்ப்பனர்". அவர் அம்பேத்கருக்குக் கரிசனம் காட்டி, கல்வி கற்றுக் கொடுத்தார். அந்த நன்றிக்காக அவர் பெயரை தனக்குத்தானே அம்பேத்கர் சூட்டிக் கொண்டார்.
* இந்தக் கதை இன்றளவும் பரப்பப்பட்டும், நம்பப்பட்டும் வரும் ஒரு பொய்க் கதை என்பதைத் தோழர் யாக்கன், பல்வேறு ஆதாரங்கள் கொண்டு முறியடிக்கிறார்.
* 64 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், 21 அரிய புகைப்பட ஆதாரங்கள் கொண்டு, அம்பேத்கர் பெயரிலான பொய்க் கதையைத் தவறு என்று நிறுவியுள்ளார்.
*இந்நூலில் அம்பேத்கரின் பள்ளிப் படிவச் சான்றிதழின் நகல் உள்ளது."பீமாராவ் அம்பேத்கர்" என்று உள்ளது. அவரின் தந்தை, தாய், உறவினர்கள், அம்பேத்கர் பற்றி நூல் எழுதியவர்கள், அவர் கைப்பட எழுதிய கடிதங்கள் என்று பலவும், வரலாற்றுச் செய்திகளும் உண்டு.
* கலகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூலின் விலை, ரூ. 50 மட்டுமே. அண்ணலை வாசிப்போர் அனைவர் கையிலும் இருக்க வேண்டிய அறிவாயுதம்.
வாங்கிப் படிப்போம்! பரப்புவோம்!
-வை.கலையரசன்
No comments:
Post a Comment