திருச்சி, இலால்குடி, கரூர் மாவட்டங்களின் காணொலிக் கலந்துரையாடல்
திருச்சி, மே 5, திருச்சி, இலால்குடி, கரூர் மண்டலக் கலந்துரையாடல் கூட்டம் காணொலி வாயிலாக 23.4.2020 அன்று, திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் வரவேற்புரையுடன் தொடங்கியது.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் பேசும் போது,
ஊரடங்கு நேரத்தில் நம் மனநிலையை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துக் கூறினார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலை வாயிலாகப் பல்வேறு வழிகாட்டுதல் நெறிகளைக் கூறியுள்ளதையும் நினைவு கூர்ந்தார்.
காணொலிக் கூட்டத்தில் கழகத் தோழர் ஒருவர் தாடி வைத்துக் கொண்டு, சோகமான முகத்துடன், ஆளே அடை யாளம் தெரியாமல் இருந்ததைச் சுட்டிக் காட்டி, வழக்கம் போல தினமும் காலையில் எழுந்து எப்போதும் போல உற்சாகமாக இருக்க வேண்டும் என ஆசிரியர் அவர்கள் 21 அம்ச அறிக்கையில் எழுதி இருந்ததைக் குறிப்பிட்டு பேசினார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழி லாளர்கள் உள்ளிட்ட நம் தோழர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளை மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்கள் சிறப்பாகச் செய்து வருவதையும் பாராட்டினார்.
நம் வீட்டுப் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் நம்மைவிட புத்திசாலிகளாக இருக்கிறார்கள் என ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார்கள். அதற்கிணங்க ஆராக்கியராஜ் அவர்களின் கடைசி பையன் இங்கர்சால் அவர்கள் இந்தக் காணொலிக் காட்சியை 3 மாவட்டத்தையும் இணைத்து சிறப் பாக நடத்தியுள்ளார் எனவும் இரா.ஜெயக்குமார் பேசினார்.
தொடர்ந்து பேசிய ஞா.ஆரோக்கியராஜ் அவர்கள், தமிழர் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திருச்சி, இலால்குடி மாவட்டக் கழகத் தோழர்களுக்கு உதவிகள் செய்து வருவதைக் குறிப்பிட்டார்.
திருச்சி மண்டலச் செயலாளர் ப.ஆல்பர்ட், இலால்குடி மாவட்டத் தலைவர் வால்டேர், திருச்சி மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் அம்பிகா கணேசன் உள்ளிட்ட பல்வேறு கழகத் தோழர்கள் நிதியுதவி செய்தனர். கடந்த 10 நாட்களாக திருச்சி, இலால்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சோமரசன் பேட்டை, அல்லித்துறை, ஜெயில்பேட்டை, கொடாப்பு, பூவாளூர், போலீஸ் காலனி, துவாக்குடி, நடேசபுரம், சிறீ ரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட திருச்சி மாநகாரட்சிப் பகுதிகளிலும் நம் கழகத் தோழர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
25 கிலோ கொண்ட 1 அரிசி மூட்டை மற்றும் ஒரு மாதத் திற்குத் தேவையான மளிகைப் பொருட்களும் கொடுக் கப்பட்டன. குடும்பத்திற்கு ரூபாய் 1500 வீதம் இது வரை 40 குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட் டுள்ளன. இதில் சில தோழர்களுக்குப் பெரியார் மாளிகையிலும், சிலருக்கு நேரடியாகவும் வழங்கப்பட்டன.
காலை 6 மணிக்கு வெளியில் சென்றால் மதியம் 2 மணிக்கு வீடு வந்து சேரும் வகையில் இந்த 10 நாட்களும் அமைந்தன. திருச்சி, இலால்குடி மாவட்டத் தலைவர், செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள், ஒன்றிய, நகர, கிளைக் கழகத் தோழர்கள் பலர் தங்களால் இயன்ற உதவியை, உழைப்பை நல்கினர். இன்னும் சிறிது நாள் இடைவெளி விட்டு, மீண்டும் ஒரு சுற்று வர வேண்டும் என ஆரோக்கியராஜ் அவர்கள் பேசினார்.
மாவட்டத் தலைவரின் இந்த உதவிகள் குறித்து "என் திருச்சி" என்கிற "யூ டியூப்" செய்தி நிறுவனம் ஒரு நேர் காணல் எடுத்து வெளியிட்டது.
இறுதியாக உரையாற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் திருச்சி, இலால்குடி மாவட்டத்தின் மனிதநேயப் பணிகளைப் பாராட்டிப் பேசினார்.
இந்தக் கரோனா காலத்திலும் நாம் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும் எனத் தமிழர் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள். உலகப் புத்தக நாளை முன்னிட்டு குறிப்பிட்ட சில நூல்களுக்கு 50 விழுக்காடு கழிவு வழங்கப்பட்டுள்ளது.
100 ரூபாய் தொகுப்பில் 12 புத்தகங்கள், 200 ரூபாய் தொகுப்பில் 28 புத்தகங்கள், 300 ரூபாய் தொகுப்பில் 13 புத்தகங்கள், 400 ரூபாய் தொகுப்பில் 24 புத்தகங்கள், 500 ரூபாய் தொகுப்பில் 37 புத்தகங்கள் என 5 வகையாகப் பிரிக்கப்பட்டு கழிவு வழங்கப்படுகிறது.
ரூபாய் 3000 மதிப்புள்ள 114 புத்தகங்களையும் மொத் தமாக வாங்கும் போது கழிவு போக ரூபாய் 1500 மட்டுமே வருகிறது. இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
பொதுவாக இதை விற்பனை என்ற கண்ணோட்டத்தில் நாம் பார்ப்பதில்லை. நமது நோக்கம் பிரச்சாரம் மட்டுமே. தமிழகம் முழுக்க நாம் புத்தக விற்பனையைச் செய்து வருகிறோம். இளைஞர்கள் நமது நூல்களை அதிகம் வாங்குகின்றனர்.
அண்மையில் கூட பெரியார் அன்றும் என்றும், அம்பேத்கர் அன்றும் என்றும், மார்க்ஸ் அன்றும் என்றும் என்கிற நூல்கள் வெளியாகி சமூகத்தில் நல்ல வரவேற்பை பெற்றன. வட மாநிலங்களில் கூட பெரியார், அம்பேத்கர் பனியன் அணிந்து வலம் வரும் இளைஞர்கள் அதிகரித் துள்ளனர். நாடாளுமன்றத்தில் கூட திராவிடம் வாழ்க, பெரியார் வாழ்க என்பதைக் கேட்க முடிகிறது. நம் இயக் கத்தில் இருந்து ஏராளமான நூல்கள் வந்துள்ளன. அதில் ஏதாவது ஒரு நூலுக்காவது இதுவரை மறுப்பு வந்துள்ளதா?
அண்மையில் பேராசிரியர் அருணன் எழுதிய காலந் தோறும் பிராமணீயம் எனும் நூல் படித்தேன். மிகச்சிறந்த ஆய்வு நூல். திராவிடர் கழகம், பெரியார், ஆசிரியர் குறித் தெல்லாம் அற்புதமாக எழுதியிருக்கிறார் அருணன் அவர்கள். அதுபோல அதியமான் என்பவர் வைக்கம் போராட்டம் என்கிற சிறப்பான நூலையும் அண்மையில் வெளியிட்டார். பெரியார் குறித்த நூல்கள் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளிலும் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. பாரதிதாசன் சொன்னது போல மண்டைச் சுரப்பை உலகம் தொழும் காலம் வந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் உலக அளவில் பன்னாட்டு மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.
பெரியாரிடம் எவ்வளவோ பேர் கேள்வி கேட்டார்கள். அய்யா பதில் சொல்லிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவர்களிடம் கேள்விகள் தீர்ந்து போயின", எனப் பல்வேறு செய்திகளை நினைவு கூர்ந்து கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார். திருச்சி மண்டலச் செயலாளர் ப.ஆல்பர்ட் நன்றி கூறினார்.
இந்தக் காணொலிக் கூட்டத்தில் இலால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர், செயலாளர் அங்கமுத்து, திருச்சி மண்டலச் செயலாளர் ப.ஆல்பர்ட், கரூர் மாவட்டச் செயலாளர் காளிமுத்து, வழக்குரைஞர் அணி துணைத் தலைவர் கா.இராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர் ஜெகநாதன், கரூர் மாவட்ட மாணவர் கழகத்தலைவர் கார்த்தி, கரூர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அலெக்ஸ், திருச்சி மண்டல இளைஞரணித் தலைவர் அன்புராஜா, மண்டல மகளிரணிச் செயலாளர் சோ.கிரேசி, திருச்சி மாவட்ட மகளிர் அணித் தலைவர் ரெஜினா பால்ராஜ், பகுத்தறிவாளர்கள் கழகத் தோழர் மணியன், திராவிட தொழிலாளர் கழகச் செயலாளர் அசோக்ராஜ், பொருளாளர் ஆண்டிராஜ், சங்கிலியாண்டபுரம் கண்ணன், தீனதயாளன் ஆகியோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment