இலெமுரியா அறக்கட்டளையின் மனிதநேய உதவிகள்
மும்பை,மே 5, மும்பையில் சு.குமணராசன் தலைமையில் இலெமுரியா அறக்கட்டளை சார்பில் மனிதநேய உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கரோனாநோய்ப் பரவல் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கால் இன்று உலக மக்கள் அனைவரும் தத்தம் இல்லங்களில் முடங்கியுள்ளனர். இந்த உலகடங்கின் விளை வாக பல நாடுகளில் மக்கள் பெரும் உயிரிழப்பையும், பொரு ளாதார இழப்பையும் எதிர் கொண்டு தன் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
அந்த வகையில் மும்பைப் பெருநகரில் பல இலட்சம் தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆசியக் கண்டத்தின் பெரும் குடிசைப் பகுதி என்று குறிப்பிடப்படுகின்ற தாராவிப் பகுதியில் போதிய சுகாதார வசதிகளின்றி வாழ் கின்றனர். இந்தியாவில் மும்பை நகரம்தான் இந்த தொற்று நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கிற ஒரு பெருநகரமாகும், அதிலும் தாராவி போன்ற பகுதிகளில் மக்கள் நெருக்கம் ஒரு சதுர கி.மீட்டருக்கு ஒரு இலட்சத்திற்கு மேல் என இருப்பது உலகில் எங்கும் காண இயலாத அடர்த்தியாகும்.
இன்னும் ஒரு மாத காலத்தில் மழைக்காலம் தொடங்க விருக்கின்ற நிலையில் வீடுகளே இல்லாத தமிழ்த் தொழி லாளர்கள் வருவாயும் இன்றி, தமிழ்நாடு திரும்ப வழியும் இன்றி கதறி அழுகின்ற காட்சிகள் நம் நெஞ்சை உருக்குவதாக உள்ளன. அவர்களுக்கு உடனடி நிவாரணமாக, கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக இலெமுரியா அறக்கட்டளை உணவுத் தொகுப்புகளை வழங்கி அவர்களின் கோரிக்கை களை மராத்திய மாநில அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தெரிவித்து வருகிறது.
வாழ்வாதாரத்தை இழந்து வாடும் மக்களுக்கு தொண்டு செய்யும் வகையில் அம்மக்களிடம் இருப்பிடங்கள் தேடி ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மும்பை தாராவி,மாகிம்,மாதுங்கா லேபர்கேம்ப், ஒர்லி மார்க்கண்டேசுவர் நகர், ஆனந்த் நகர், ரே ரோடு, சிவ்ரி, அந்தேரி, கோரேகாவ், ஆரே காலனி, மால்வாணி, பகத்சிங் நகர், காந்திவிலி, அம்பர்நாத் சாமி நகர், குண்டோலி, தானே சுபாசு நகர், ஆனந்த் நகர், லோக்மான்ய நகர் என மும்பையின் பல பகுதிகளில் தமிழ் மக்கள் மட்டுமின்றி பிற மாநிலத் தொழிலாளர்கள், துப்புரவுப்பணியாளர்கள், காவலர்கள் என பல குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, உப்பு, சமையல் எண்ணெய், பருப்பு, காய்கறிகள், தேயிலைத்தூள், மஞ்சள், மிளகாய்த்தூள் போன்ற அன்றாட உணவுக்கான சமையல் பொருள்களை “இலெமுரியா அறக்கட்டளை” வழங்கி வருகிறது.
இந்த மனித நேயப் பணியில் கடந்த ஒருவாரத்தில் சற்றொப்ப அறுபத்து இரண்டாயிரம் (62,000) கிலோ உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் அறக்கட்டளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உணவுக்காக வேண்டு கோள் விடுத்து வருகின்றனர். எனவே இதை விரைவில் ஒரு இலட்சம் (1,00,000) கிலோவாக அதிகரிக்கும் வகையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர நாளை முதல் இலெமுரியா அறக்கட்டளையின் சார்பில் ஊரடங்கு முடியும் வரை ஒவ்வொரு நாளும் 500 உணவுப் பொட்டலங்களையும் தாராவிப் பகுதியில் பசியால் வாடும் மக்களுக்கு வழங்க உள்ளதாக அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் தெரிவித்துள்ளார். இதுவும் ஒரு தொடர் செயல்பாடாக அமையும்.
இந்த அரிய தொண்டின் செயல்பாடுகளுக்கு உதவியாக ஒவ்வொரு பகுதிகளிலிருந்து ஒருங்கிணைப்பாளர்கள் செயல்பட்டு வருகின்றனர். அ. இரவிச்சந்திரன், சிறீதர் தமிழன், முத்தமிழ் தண்டபாணி, கோவிந்தன் (அம்பர்நாத்) சித்தார்த்தன், தனுசுகோடி, முகிலன், கு.இராசா (தானே பகுதிகள்) அ.ஆறுமுகம், மணிகண்டன் இராசேந்திரன், செந்தில், காந்தி (ரே ரோடு, சிவ்ரி) உ.பன்னீர்செல்வம், த.செ.குமார், மஞ்சுளா, பெ.கணேசன் (தாராவி,மாகிம்) ஆர்.கே.சிவா, சரவணன் (ஆரே காலனி) ஆல சந்திரன், (மால்வாணி) கமல் வேலுச்சாமி (காந்திவிலி) நங்கை (அநாதை முதியோர் இல்லங்கள்), ஜான்சன் எபிநேசர், சுதன்ராஜ் (பகத்சிங் நகர்), முத்துகிருட்டிணன் (அந்தேரி கிழக்கு), சுப்பிரமணியன் (மலாடு கிழக்கு) என பலரும் செயல்பட்டு உணவுப் பொருள் களை அந்தந்த பகுதிகளில் வழங்கி வருகின்றனர்.
மேலும் மகாராட்டிரா மாநிலத்தில் மும்பை, நாண்டெட், சோலாப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு செல்ல இயலாமல் தவிக்கும் பொதுமக்களையும் ஊரடங் குக்குப் பின்னர் தமிழ்நாடு அனுப்பி வைக்க மராத்திய மாநிலம் மற்றும் தமிழ்நாட்டு முதலமைச்சரிடமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊருக்கு ச்செல்ல இயலாமல் தவிக்கும் பொதுமக்கள் தங்கள் விவரங்களை அறக்கட்டளைக்கு மின் னஞ்சல், தொலைபேசிவாயிலாக (tamil.lemuriya@gmail.com / 9820281623) தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு இலெமுரியா அறக்கட்டளைத் தலைவர் சு.குமணராசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment