ஹோம குண்டங்களில் வேகவில்லையா கொரோனா ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 2, 2020

ஹோம குண்டங்களில் வேகவில்லையா கொரோனா !


போபால் விச வாயு விபத்து நடந்ததை ஒட்டி ஒரு கட்டுக் கதையைப் பார்ப்பனர்கள் பரப்பி விட்டிருந்தார்கள்...


அதாவது அந்த விபத்து நடந்த இரவு ஒரு பார்ப்பனர் தன் வீட்டில் ஓமம் வளர்த்ததாகவும், ஹோமம் வளர்க்கப் பயன்படுத்திய பொருட்களாலும், அதில் வந்த புகையின் காரணமாகவும், அவர் வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினருக்கு மட்டும் விச வாயுத் தாக்குதலால் எதுவுமே ஆகவில்லை. அதனால்தான் நம் முன்னோர்கள் (அவாளின் முன்னோர்கள்) ஹோமங்களை நடத்தினார்கள் என்பதுதான் அந்தக் கதை!


இன்றளவிலும் சங்கிகள் மத்தியில் இந்த கதைக்கு எப்போதும் டி.ஆர்.பி அதிகம்! பார்ப்பனர்களுக்கு முட்டுக் கொடுக்க சூத்திர சங்கிகள் ஓட்டும் வாடகைக் கார் (நீணீதீ) இதுதான்!


சரி, இப்போது சங்கதிக்கு வருவோம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பட்டருக்குக் கொரோனா தொற்றாம்! அதன் காரணமாக அவரது தாயாரும் மறைவுற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது!


நமக்குள்ள கேள்வியெல்லாம் இந்த பட்டர் எத்தனை ஹோமம் செய்திருப்பார்? எத்தனை பூஜை செய்திருப்பார்? விச வாயுவையே அசால்ட்டாக லெப்ட் ஹேண்ட் டீலிங் செய்யும் ஹோமத்திற்கு கொரோனாவெல்லாம் எம்மாத்திரம்? இப்படி பல கேள்விகள் நமக்கு எழுகின்றன! ஆனால் இந்த நிகழ்வை பார்ப்பனர்களும், சங்கிகளும் வசதியாக மறந்துவிட்டு நம்மிடம் ‘கொரோனா ஜிகாத்’ பற்றி வகுப்பு எடுக்கிறார்கள்!


அந்த பட்டர் வெளிநாட்டிற்கு சென்று திரும்பியதை அரசாங்கத்திடமிருந்து மறைத்திருக்கிறார்! அது போக தட்டில் தட்சணை போடாதவர்கள் மீது எச்சில் துப்பினார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது! இது ஒரு அப்பட்டமான ஆன்ட்டி இண்டியன் செயல்! சொந்த நாட்டு மக்களையே வைரஸ் பரப்பி கொலை செய்யும் பாதகச் செயல்!


அப்படியானால் இந்தச் செயலை நாம் எப்படி அழைப்பது? பூணூல் ஜிகாத் என்றா? அது வேண்டாம்... பிறகு அவர்களுக்கும் நமக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்!


- புருனோ என்னாரெசு


No comments:

Post a Comment