காணொலி மூலம் நடைபெற்ற கலந்துரையாடலில் தி.க. சட்டத் துறைக் கூட்டத்தில் தீர்மானம்
சென்னை, மே 2 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கழக வழக்குரைஞரணி சார் பில் காணொலி மூலம் 26.4.2020 அன்று நடத்தப் பெற்ற கலந்துரையாடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப் புரையாற்றினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி சென்னையி லிருந்து திராவிடர் கழக வழக் குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன் தலைமை வகிக்க மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு. சித்தார்த்தன் வரவேற்புரையாற்ற காணொலி மூலம் கழக வழக்குரைஞர் களுடனான உரையாடல் காலை 11 மணிக்குத் தொடங் கியது. மாநிலம் முழுதும் உள்ள வழக்குரைஞர்கள் தங்கள் கருத்துகளை மகிழ் வுடன் தெரிவித்தார்கள். கரோனா ஊரடங்கு காலத்தில் எப்படி வழக்குரைஞரணி செயல்பட வேண்டும் என்று குறிப்பாக செயலாளர் மு. சித் தார்த்தன் அறிமுக உரை யாற்றினார்.
வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன் இந்தக் காலக் கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எவ் வளவு புதிய நீதிபதிகளை நியமிக்க முயற்சி நடக்கிறது என்றும், பார்ப்பன வழக்குரைஞர்களை நியமிக்கும் முயற்சிகளை ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்றும், ஏற்கெனவே 10 நீதிபதிகள் பார்ப்பனர்களாக இருக்கும் நிலையில் மேலும் அதிக நீதிபதிகளை ஒரே சமூகத்தில் இருந்து நியமிப்பது சமூகநீதியை கேலிக் குள்ளாக்கும் செயல் என்றும் இதனைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏற்கெனவே விடுதலையில் சுட்டி க்காட்டி வெளியிட்டுள்ளார் என்பதையும் அதுபற்றி வழக்குரைஞர்கள் தங்கள் கருத்துகளை ஆக்கப்பூர்வ மாக எடுத்துச் சொல்லாம் என்றும் தெரிவித்தார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் எவ்வாறு பொழுது போகிறது என்பதையும், வழக்குரைஞர்கள் எப்படி இந்த நேரத்தினைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் தொடர்பில் வந்த வழக்குரைஞர்கள் தெரிவித்தார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு கழகத் தலைவரைக் காணும் வாய்ப்பு பெற்றதற்காக மகிழ்ச்சி தெரிவித்த வழக்குரைஞர்கள் ஆசிரியர் என்ன சொல்கிறாரோ அதைச் செயல்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வழக்குரைஞர்கள் கரூர் மு.க. இராஜசேகரன், சென்னை சு. குமாரதேவன், தெ. வீரமர்த்தினி, ம.வீ. அருள்மொழி, கே.வீரமணி, ஜெ. துரைசாமி, பாலசுப்ரமணியம், ரவி, து.வீரன் மு. சென்னி யப்பன், பா. மணியம்மை, இன்பலாதன், திருப்பூர் ஆ.பாண்டியன், தம்பி பிரபாகரன், பூவை. புலிகேலி, கோ.சா.பாஸ்கர், உத்திரகுமாரன் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.
இறுதியாக அனைத்தையும் கேட்டு, தன் மகிழ்வினை வெளிப்படுத்திய ஆசிரியர் அவர்கள் இக்கரோனா ஊரடங்கு காலத்தில் வழக்குரைஞர்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் மற்றும் இயக்கத்திற்காக ஆக்கப் பூர்வமான பணிகளை எப்படிச் செய்வது என்பது பற்றி விரிவாக விளக்கினார். நம் இயக்கம் சாதித்தவைகளை உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் சொல்லப்பட் டுள்ளவைகளை தொகுத்து புத்தக்கமாக்கலாம். உதார ணமாக சுயமரியாதைத் திருமணம் (7ஏ இந்து திருமணச் சட்டம்) பற்றி வெளிவந்துள்ள தீர்ப்புகள் தந்தை பெரியார் பற்றியும் நமது இயக்கம் பற்றியும் வெளிவந்த தீர்ப்புகள் அதில் குறிப்பாக தந்தை பெரியாரின் சமூகநீதி நடவடிக்கைகள் மற்றும் அதனால் விளைந்த நன்மைகள் பற்றி ஒவ்வொரு நீதிபதிகளும் எழுதியுள்ள கருத்துகள்,
கழகம் எந்தெந்த பிரச்சினைகளில் நீதிமன்றத்தை அணுகி வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றது. அது சம்பந்தமான தீர்ப்புகள் ஆகியவற்றைத் தொகுக்கும் பணியில் ஒவ்வொரு வழக்குரைஞரும் ஈடுபட வேண் டும் என்று எடுத்துரைத்தார். இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் கழகத்தவர் சந்திக்கும் வழக்குகளை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்றும் அதன்மூலம் எவ்வாறு கழகத்தவர் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார். 1987இல் அப்போதைய தலைமை நீதிபதி எம்.என். சந்துர்கர் அதிகப்படியான பார்ப்பன நீதிபதிகளை நியமிக்க முடிவு செய்தபோது கழகம் அதை எப்படி வழக்குரைஞர்களை ஒன்றிணைத்து போராடி வெற்றி பெற்றது என்பதையும் நினைவு கூர்ந்தார்.
மொத்தத்தில் இந்தக் கூட்டம் மிகுந்த பயனுள்ள தாகவும், அவசியமானதாகவும் இருந்தது. கலந்து கொண்ட வழக்குரைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு, மனநிறைவுடன் விடை பெற்றனர். இந்த இணையவழி காணொலி கலந்துரையாடல் நிகழ்வை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களை அனைத்து வழக்குரைஞர்களும் பாராட்டி, நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
கழக வழக்குரைஞரணி கலந்துரையாடலில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1:
உலகை உலுக்கி வரும் கரோனா தொற்று நோய் ஒழிப்பு பணிகளில் சுயநலம் பாராமல் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவம் தொடர்புடைய செவி லியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் இதர பணியாளர்கள் காவல்துறையினர் ஆகியோருக்கு திராவிடர் கழக சட்டத்துறை தனது பாராட்டுதல்களைத் தெரிவித்து கொள்கிறது. தமிழக அரசு மேற்கண்ட துறையினரின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் பணி இடம் மாறுதல் சம்பந்தமானவைகளை உடனடியாகத் தீர்த்து வைக் குமாறு கேட்டுக் கொள்கிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் அரசும் மருத்துவர்களும் கூறுவதைக் கேட்டு பொதுமக்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வதோடு தினக்கூலிப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயக் கூலிகள் என்று பல தரப்பட்ட மக்கள் உணவின்றி வாடுவதை தடுக்கும் நோக்கில் அரசு அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வதோடு தன்னார் வலர்கள் அளிக்கும் உதவிகளுக்குத் தற்போதுள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறுக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2:
இந்தியாவிற்கு சமூகநீதியில் வழிகாட்டும் மாநில மான தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு எதிரான செயல்கள் வெகுவேகமாக இந்த கரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெற்று வருகிறது.
இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து திறமையான வழக்குரைஞர்களை நீதிபதிகளாக நியமிப்பதே சமூகநீதியின் அடிப்படையாகும். இது மட்டு மல்லாமல் வேறு மாநிலங்களில் வழக்குரைஞர்களாக இருக்கும் பார்ப்பனர்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமனம் செய்து பின்பு அவர்களை அந்த அந்த மாநிலங்களிலேயே நியமிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிய வருகிறது. இது மாநில உரிமைகளை பறிக்கும் மிக மோசமான முன்னுதாரணமாகும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த டில்லியில் பணிபுரிந்த ஒரு வழக்குரைஞரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக நியமனம் செய்து, பின்பு அவரை வேறொரு மாநிலத்திற்கு மாற்றியதுபோல பல்வேறு மாநில வழக்குரைஞர்களை நீதிபதியாக நியமிப்பது மிகக் கண்டனத்திற்குரியதாகும் என்பதோடு அப்படி நியமனம் செய்யப்படும் பட்சத்தில் ஒத்த கருத்துள்ள சமூக நீதியாளர்களை ஒன்றிணைத்து மாபெரும் போராட்டத்தினை நடத்திட திராவிடர் கழகம் ஒரு மனதாக தீர்மானிக்கிறது. இது சம்பந்தமாக கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு தருவதென தீர்மானிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே பத்து முற்பட்ட வகுப்பு, பார்ப்பனர்கள் நீதிபதிகளாக உள்ள நிலையில், காலியாக உள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கு மீண்டும் அதிக எண்ணிக்கையிலான பார்ப்பன வழக்குரைஞர்களை நீதிபதிகளாக நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி முயற்சி செய்து வருவதாகவும், அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பின்னணியில் இருந்து பா.ஜ.க. அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டுள்ளன. இதுபற்றி 24.4.2020 தேதியிட்ட விடுதலை நாளிதழில் சுட்டிக் காட்டப்பட் டிருந்தது. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் மிகுந்த கண்டனத்திற்குரியதாகும்.
தீர்மானம் 3
கரோனா ஊரடங்கு நடைபெறும் இக்கால கட்டத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு வன்கொடுமைகள் நடைபெறுவதாக செய்திகள் வந்து கொண்டிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிப்ப தாகவுள்ளது. மகளிர் ஆணையம் மற்றும் சிறார் ஆணை யம் தகுந்த நடவடிக்கையினை உடனடியாக எடுத்திட வும் அதற்கு திராவிடர் கழக சட்டத்துறை தனது முழு மையான பங்களிப்பினை அளித்திடவும் வேண்டும் பட் சத்தில் சட்ட உதவிகளை செய்வதெனவும் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4:
சமூகத்தின் கடைநிலையிலிருக்கும் தூய்மை பணியாளர்களின் கரோனா காலத்திய நிலைமை மிக மோசமாகவுள்ளது. மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் இன்றும் தொடர்வது "நாம் மனிதர்கள் தானா?" என்ற நிலைமையினை கேள்விக்குள்ளாக் குகிறது. 1993 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளில் இது சம்பந்தமான சட்டங்களை ஏற்றினாலும் அவர்களது அவலம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்த கொடியக் காலத்தில் அவர்களை காக்கக் கூடிய கருவிகள், கையுறை, முகக் கவசம், வேளா வேளைக்கான சத்துணவு மற்றும் அவர்களது ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், வீட்டு வசதி ஆகியவற்றின்மீது உடனடி கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கையினை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறது. மேலும் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனாத் தொற்று ஏற்பட்டுள்ள இந்தவேளையில் அரசு இதில் தனிக்கவனம் செலுத்துமாறு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.
கலந்துரையாடலில் கழகத் தலைவரின் ஆலோசனைகள்
- எஞ்சியுள்ள வழக்குகள் - குறிப்பாக நமது கழக வழக்குகள் பற்றி முழுத் தகவல்களைத் திரட்டல்.
- ‘விடுதலை' தவறாது படிப்பது முக்கியம்.
- கருத்தரங்குகளுக்குத் திட்டமிடல் வேண்டும்.
அ). ‘மதச்சார்பின்மை' என்பதை அரசமைப்பச் சட்டத்திலிருந்து நீக்கிட மறைமுகமான ஏற்பாடுகள்.
ஆ). சமூகநீதி - இட ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட அண்மைக்காலத்தின் நீதிப் போக்கு.
- காலாவதியாகவேண்டிய காலனியச் சட்டங்கள்
- நமது இயக்கத்தவர்களுடன் இணைந்து சிறு சிறு உதவிகளைச் செய்ய பொருளாதார முடிவுக்கு
முன்வருதல்.
- மூத்த ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்களின் கருத்துகளை அறிந்து கொள்ளுதல்.
- நமது கொள்கைகள் சம்பந்தப்பட்ட பிரபல வழக்குகள் - தீர்ப்புகள் - ஓர் முக்கிய தொகுப்பு தேவை.
எடுத்துக்காட்டாக செண்பகம் துரைராஜன் எதிர் தமிழ்நாடு அரசு. தெய்வாணை ஆச்சி எதிர் சிதம்பரம்.
- 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் - இந்திரா சகானி எதிர் மண்டல் வழக்கு.
No comments:
Post a Comment