மும்பை தீ விபத்தின் பின்னணியில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 7, 2020

மும்பை தீ விபத்தின் பின்னணியில்...

வங்கி மோசடி செய்து நாட்டை விட்டு ஓடிய நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்கு கோப்புகள் தீ விபத்தில் எரிந்து விட்டதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி பண மோசடி செய்த வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவர் உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் குடும்பத்துடன் நாட்டை விட்டே ஓடி விட்டனர்.  தற்போது இங்கிலாந்து சிறையில் நீரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார். ஆண்டிகுவா நாட்டுக் குடியுரிமை பெற்றுள்ள மெகுல் சோக்சி அங்கேயே தங்கி உள்ளார்.  இருவரையும் இந்தியா அழைத்து வர அரசு கடும் முயற்சி எடுத்து வருவதாகக் கூறப் படுகிறது.


இவர்கள் இருவருடைய பொருளாதாரக் குற்றங்கள் தெற்கு மும்பையில் உள்ள வருமான வரி அலுவலகக் கிளையில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த அலுவலகக் கட்டடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீப்பிடித்தது. இந்தத் தீ, நான்காம் கட்டடம் அளவுக்குச் சென்றுள்ளது.  மிகவும் பாடுபட்டுத் தீயை சனிக்கிழமை அன்று அணைத்துள்ளனர்.  ஆயினும் சூடு காரணமாகச் சனிக்கிழமை முழுவதும் அலு வலகம் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்துள்ளது.


இந்தத் தீ விபத்துக் காரணமாக வருமான வரித் துறையின் கடன் வசூல் தீர்ப்பாய அலுவலகம் முழுமையாக அழிந்துள்ளது.   இந்தப் பகுதியில் நேற்று மாலை தான் அதிகாரிகள் நுழைந்து சோதனை இட முடிந்துள்ளது. அதிகாரிகள் தரப்பில், இந்தத் தீவிபத்தில் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியின் வழக்குக் கோப்புகள் மற்றும் எஸ்ஸார் குழும வழக்குகளின் கோப்புகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் எரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.


எரிந்து போன கோப்புகள் அனைத்தும் பண மோசடி, திவால் குறித்த விசாரணை சம்பந்தப்பட்டவை என்பதால் சமூக ஆர்வலர் அனில கல்கலி இது வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட தீ விபத்தாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.  இந்த வழக்குகள் குறித்து ஏற்கெனவே பல முறை தகவல் அறியும் சட்டத்தின்கீழ்  பல ஆவணங்களைக் கேட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இந்தியாவின் பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால் இதுபோன்ற சதிகள் ஏராளம் நடை பெற்றுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன.


காந்தியார் படுகொலை தொடர்பான வழக்குக் கோப்புகளே காணாமல் போயின என்று கூறப் படவில்லையா?


பாபர் மசூதி இடிப்புத் தொடர்பான வழக்கில் கோப்புகள் பற்றி கூட இப்படி ஒரு தகவல் கசிந்த துண்டு.


கோடிக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கிய வர்கள் இந்தியாவை விட்டு தப்பித்துச் செல்லுகிறார்கள் என்று தெரிந்திருந்ததும், அவர்களைத் தப்பவிட்ட வர்கள் அரசியல் செல்வாக்கும், பதவி அதிகாரமும் மிக்கவர்கள் என்பதெல்லாம் நம் நாட்டில் வெளிவந்த சர்வ சாதாரணமான செய்திகள் ஆயிற்றே!


குறிப்பிட்ட நீதிபதி தம் வழக்கைத் தொடர்ந்து நடத்தினால் தீர்ப்புகள் எதிராக வரும் என்ற நிலையில் சந்தேக மரணத்துக்கு ஆன நிலையெல்லாம் உண்டே!


இந்தியா - ஒரு வித்தியாசமான ஜனநாயக நாடே!


No comments:

Post a Comment