செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 4, 2020

செய்தித் துளிகள்....

* கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு முப்படை வீரர்கள் விமானப்படை ஹெலிகாப்டர்கள்மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தினர். (மகிழ்ச்சி - அவர்களுக்கான தேவைகளை உடனடியாக நிறைவேற்றுவது இதைவிட முக்கியம்).


* பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்ததைப் பொருட்படுத்தாமல் காணொலிமூலம் வழக்கு விசாரணை தொடரும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு.


* வங்கிகள் இன்று முதல் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை செயல்படும்.


* நாட்டில் கரோனா அதிகம் பரவியதற்கு டில்லி முஸ்லிம்கள் மாநாடுதான் காரணம் என்று விஷம் கக்குகிறார் உ.பி. பி.ஜே.பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்.


* கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லுவதைத் தடுக்க பாகூர் பகுதியில் பள்ளம் தோண்டி பாதை துண்டிப்பு.


* கரோனா தொற்றுக்கு ஆளானவர்களுக்கு இலவச உளவியல் ஆலோசனை. (www.masmindfoundation.com)


* தூத்துக்குடி கூட்டுறவு வங்கி உதவியாளர்களுக்கான 96 இடங்களுக்கு மே 25 ஆம் தேதிவரை விண்ணப்பிக்கலாம்.(www.tutdrb.in)


* இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணம் பெற்று வீடு திரும்புவது அதிகரிப்பு.


* தமிழ்நாட்டில் விரைவில் ‘பிளாஸ்மா' சிகிச்சை.


* திரையரங்கு உரிமையாளர்களுக்கு நட்டம் ரூ.400 கோடியாம்.


No comments:

Post a Comment