புதுடில்லி, மே 30 இந்தியாவின் வேலையின்மை விகிதம் மே மாத இறுதிவாரம் வரை 24.3% ஆக உயர்ந்தது, முந்தைய வாரத்தில் 24 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த விதிகம் மார்ச் மாதம் 24.2%. மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் இருந்து தற்போது ஏறுமுகமாகவே உள்ளது.
இந்தியாவில் வேலையிழப்பு விகிதம் தொடர்ந்து மூன்று வாரங்கள் அதிகரித்தவண்ணம் உள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பு மய்யம் (CMIE) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அது தன்னுடைய அறிக்கையில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பு விகிதம் தொழிலாளர்களில் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கும் இதனால் நாட்டின் வளர்ச்சி விகிதமும் பாதிக்கும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது.
மார்ச் மாதம் மற்றும் மே மாத இடைவெளியில் சில புள்ளிகள் அதிகம் இருந்தாலும், இது வேலை இழந்தோர் சுமார் 20 கோடி மக்கள் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது, ஏப்ரல் மாதம் மற்றும் மே மாதத்தில் வேலையிழந்தோர் எண்ணிக்கை மிகவும் மோசமான அதிகரித்து வருகிறது
தற்போதைய சூழலில் இவ்வளவு பெரிய எண்ணிகையி லான வேலை இழப்பை அரசு ஈடு செய்ய இயலாது, இது குறித்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று நிபுனர்கள் ஆலோசனை நடத்திவருகின்றனர். ஆனால் வேலையிழப்பு என்பது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது அரசு தாமதிக்கும் ஒவ்வோரு நாளும் பல்லாயிரக் கணக்கானோர் வேலையிழந்து வருகின்றனர்.
மார்ச் மாததில் இருந்து மே 17 ஆம் தேதியுடன் முடி வடைந்த வாரத்தில் 38.8 விழுக்காடு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள் பெருமளவில் அவரவர்கள் மாநிலத்திற்குத் திரும்பி விட்டனர். ஆகையால் வேலை இழப்பு விகிதம் திடீரென அதிகரித்துள்ளது. வேலையிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது வேலை செய்யும் திறனிருந்தும் அவர்கள் பணியகங்களில் இருந்து நீக்கப்பட்டுக்கொண்டு இருக்கின் றனர். இதனால் வேலை தேடுவோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது, ஏற்கெனவே 12 கோடி மக்கள் வேலை தேடுவோர் பட்டியலில் இணைந்துள்ள நிலையில் தற்போது அதை விட அதிக அளவு மக்கள் வேலையிழந்துள்ளதால் தற்போது வேலை தேடுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது, விரைவில் இது இந்திய மக்கள் தொகையில் முக்கால் வாசியாக மாறும் பெரும் அபாயம் உள்ளது.
வேலை இழந்தவர்களில் கூலிகள். தொழில்நுட்பரீதியாக பணிபுரிபவர்கள், மாத வருவாயில் பணிபுரிபவர்கள் என்று பலர் பட்டியலிடப்பட்டுள்ளனர். நாட்டில் தொழிற்துறை மற்றும் அரசின் வேலைவாய்ப்புத்துறைகளில் வேலை வாய்ப் புகள் விரைந்து நிரப்பப்பட்டும் நிலையில் தான் வேலை வாய்ப்பு சிக்கல் தீரும். ஆனால் அரசு இதுவரை வேலை வாய்ப்புகளைப் பெருக்க எந்த ஒரு திட்டமும் வெளியிட வில்லை. தற்போது சொந்த ஊருக்கு திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூரிலேயே வேலைகளைத் தேட ஆரம்பிப்பார்கள். அப்போது ஏற்கெனவே உள்ளூரில் வேலையிழந்து இருப்பவர்களுடன் போட்டி ஏற்படும், சிலர் மீண்டும் வேலைகளைத் தேடி நகரங்களை நோக்கி புறப்படுவது போன்று தெரிகிறது. தொழிலாளர்கள் வேலை தேடுவதற்காக திரும்பி வந்தால் இது ஒரு நல்ல செய்தி, என்று தொழிலாளர்களின் வருகை வேலை வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை சிறிது தீர்க்கும் என்றாலும் அரசின் திட்டம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் இல்லை, என்று பொருளாதார கண்காணிப்பு மய்யத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment