செய்தித் துளிகள்.... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 30, 2020

செய்தித் துளிகள்....

* இட ஒதுக்கீடு - கரோனா குறித்து நாளை மாலை தி.மு.க. சார்பில் காணொலிமூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம்.


* கி.பி. முதலாம் நூற்றாண்டு மண் பாண்டங்கள் திருவள்ளூர் மாவட்டம் பழையனூர் புத்தேரியில் கண்டெடுப்பு.


* பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நீர்.


* ஊரடங்கால் புதுச்சேரி மாநில அரசுக்கு ரூ.325 கோடி இழப்பு.


* சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதலமைச்சர் அஜித் யோகி மரணம்.


* சீன விவகாரத்தில் என்ன நடக்கிறது? மத்திய பி.ஜே.பி. அரசுக்கு இராகுல் காந்தி எம்.பி., கேள்வி.


* ஏழைத் தொழிலாளர்களைப் பாதுகாக்க மாநில அரசுகள் தவறிவிட்டதாக மனித உரிமை ஆணையம் குற்றச்சாட்டு.


* 11 இலக்க கைப்பேசி பயன்பாட்டிற்கு டிராய் பரிந்துரை.


.* முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள், அவரது அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.


* ஊரடங்கு நீடிப்பு குறித்து மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.


* ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழ்நாட்டில் அய்ந்தரை லட்சம் பேர் கைது.


* நோய் இருப்பவர்கள் இரயில் பயணத்தைத் தவிர்க்க இரயில்வே அமைச்சரகம் வேண்டுகோள்.


* கரோனா பாதிப்பால் உலகளவில் உற்பத்தியில் ரூ.637 லட்சம் கோடி பாதிப்பு - இது அய்.நா. கணிப்பு.


* புகைப் பிடிப்பதைக் கைவிட வைத்துள்ளது கரோனா.


* ஊரடங்கு முடிந்தாலும் 6 மாதம் வரை பொது போக்குவரத்துப் பயன்பாடு குறையும் - ஆய்வில் தகவல்.


No comments:

Post a Comment