மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய எங்கள் குடும்ப தலைவருக்கு வணக்கம்.
காணொலி மூலம் கொள்கை உறவுகளை குடும்ப உறவுகளைச் சந்தித்து இந்த கடினமான சூழலிலும் உரையாடும் உங்களின் பரிவும் அக்கறையும் எங் களுக்கு எதையும் தாங்கும் வலிமையை தருகிறது.
எல்லா விசயத்திலும் நாங்கள் எங்கே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற தங்கள் அறிவுரை நிச்சயம் எங்களை நல்வழிப்படுத்தும்.பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு உங்கள் ஆதங்கம், அதன்மீதான தீர்வுக்கு அடுத்த கட்ட நடவடிக்கை மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்து எங்களை மீட்டு எடுக்கும் நிச்சயமாக!
அதேபோல் பெண்கள் மட்டுமே ஒன்று சேர்ந்து மனம் விட்டு பேசச்சொல்லி.எங்களின் உணர்வு புரிந்து எங்கள் உணர்வின் வெளிப்பாடாய் எங்கள் வலியை உள்வாங்கி அதற்கு மருந்தாய் அமையும் உங்கள் எண்ணங்கள் செயல்பாடுகள், தந்தை பெரியாரின் கொள்கை வாரிசாக சிறந்த பெண்ணியவாதியான தங்களின் தீர்வு அய்யா.
அதேபோல் குடும்பத்தில் ஆண், பெண் குழந்தை களை வளர்க்கும் போது எந்த இடத்தில் எந்த வயதில் ஆண், பெண் பாகுபாடுகளை பிரித்துப் பார்க்கத் துவங்கி விடுகிறோம் என்பதையும் அதில் என்ன தவறு இருக்கிறது என்பதையும் மிகமிக தெளிவாய், ஒரு நல்ல குடும்பத்தின் மூத்த உறுப்பினராய் நல்ல வழிகாட்டல் அய்யா.
இன்றைய காலகட்டத்தில் பெரியாரின் கொள்கை களைத் தவறான முறையில் திரித்துக் கொண்டு செல்லும் கூட்டத்தை அடையாளம் கண்டு கொண்டு அவர்களி டம் இருந்து எப்படி விலகி இருக்கவேண்டும் என்ற உங்கள் அறிவுரை நிச்சயமாக எங்களைப் பண்படுத்தும்.
பெண்கள் சுதந்திரம் சமத்துவம் என்பது எப்படி வேண்டுமானாலும் நடப்பது என்பதல்ல மாறாக கட்டுப் பாடோடும் ஒழுக்க முறைகளை பின்பற்றுவதுமே இது ஆண்களுக்கும் பொருந்தும் என்ற தந்தை பெரியாரின் கொள்கை உணர்வுகளை தங்களுக்கே உரிய தனித் தன்மையோடு எங்களோடு உறவாடல் அமைந்தது.
மகிழ்ச்சியும் நன்றியும் அய்யா. திராவிடர் கழகத் தின் கொள்கையாளர்களாய் நிச்சயம் தங்கள் அறிவு ரைகளைப் பின்பற்றி நடப்போம் என்று உறுதி மொழியை தங்களுக்கு அளிக்கிறோம்.
இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் எங்களை நல் வழிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடும் பேரா சையோடும் நாங்கள்! என்றும் வழிநடத்த நீங்கள்!
நன்றி அய்யா.
- ந.தேன்மொழி
மாநில மகளிரணி அமைப்பாளர் (வடக்கு )
குடியாத்தம், வேலூர் மாவட்டம்
No comments:
Post a Comment