சென்னை, மே 5- மும்பை, புனே மற்றும் சென்னையில் உதவி கள் மிகவும் தேவைப்படுபவர் களுக்கு மருத்துவ கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபக ரணங்கள், உலர் உணவு, சுகா தார அத்தியாவசியங்கள் மற் றும் மருத்துவ மனையில் சேர்க்கப்படுதல் ஆகியவை களை வழங்கிடும் வகையில், எப்சிஏ இந்தியா கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரையிலான நிதி உதவிக்கான உறுதிமொ ழியை மேற் கொண்டுள்ளது.
குறிப்பாக, எப்சிஏ இந் தியா இன்ஜினியரிங், சென் னையில் சேவாலயா மற்றும் யுனைடெட் வே மும்பை ஆகிய இலாப நோக்கற்ற நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து,இரு நகரங்களிலும் உள்ள 1500 குடும்பங்களுக்கு ஃபேமிலி கிட் விநியோகிக்க வுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இலாப நோக்கற்ற மருத்துவ மனை அறக்கட்டளையான வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் மற்றும் புனே முனிசிபல் கார்ப்பரேஷனால் நடத்தப் படும் நாயுடு மருத்துவ மனை ஆகியவற்றுடனும் எப்சிஏ இந்தியா இன்ஜினியரிங் கூட் டாண்மை மேற்கொண்டுள் ளது. 42 படுக்கைகள் கொண்ட விஎச்எஸ்-சின் கோவிட்-19 தனிமை வார்டுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும், மேலும் நாயுடு மருத்துவ மனைக்கு ஏர் வேலிடேஷன் அமைப்புகள் மற்றும் மருத் துவ ஆக்சிஜன் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்.
நிதி உதவிக்கு கூடுதலாக, எப்சிஏ இந்தியாவின் ஊழி யர்கள் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை தானாக முன் வந்து ஏழைகளின் துன்பத் தைத் தணிக்க உதவியுள்ளனர். இந்த நிதி உணவு தானியங்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை மருத் துவமனையில் சேர்ப்பதற்கும் பயன் படுத்தப்படும் என எப்சிஏ இந்தியாவின் தலைவ ரும், நிர்வாக இயக்குநருமான பார்த்தா தத்தா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment