வேலூர், மே 2- இந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் கரோனா வைரஸுக்கு எதிரான அய ராத போராட்டத்தை தொடர்ந்துவரும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வழங் குநர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க 1.5 லட்சம் பேக்குகள் ஹார்லிக்ஸை நன் கொடையாக வழங்க உறுதி பூண்டுள்ளது. முதல் தொகுப் புகள் ஏற்கனவே இந்தியா முழுவதும் 39 கோவிட் மருத் துவமனைகளை அடைந்துள் ளன, விரைவில் 12 முக்கிய நகரங்களில் உள்ள அனைத்து முக்கிய கோவிட் மருத்துவ மனைகளையும் சென்றடை யும்.
இந்திய மக்கள்தொகையில் ஜிங்க் குறைபாடு வெவ்வேறு வயதினரில் 40-60% வரை வேறு படுகிறது, போதிய ஜிங்க் இல் லாத உணவு முதன்மைக் கார ணமாகும்.
மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப் படும் ஹார்லிக்ஸ், ஜிங்க், வைட் டமின் சி மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றின் வளமான மூலமாகும் என எச்யூஎல் தலைவரும் நிர்வாக இயக்குந ருமான சஞ்சீவ் மேத்தா தெரிவித்துள்ளார். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடஇந்தியாவுக்கு உதவு வதற்காக 100 கோடி ரூபாய் உறுதியளிப்பதாக பிஹிலி சமீபத்தில் அறிவித்தது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment