சென்னை, மே 5- வெளி மாநி லங்களில் சிக்கியுள்ள தமிழர் களை அழைத்துவர தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்குவதாக கே. எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற பல்லாயிரக்கணக் கான தமிழர்கள் அங்கே வேலை யுமின்றி, உண்ண உணவின்றி உறங்க இடமின்றி,கடந்த 40 நாட்களாக பல்வேறு மாநி லங்களில் தவித்துக் கொண் டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய ரயில்வே அமைச்சகம் பயணச் செல வுக்கான பணத்தை அவர்களி டம் கேட்கிறது. மாற்று உடையின்றி தவிக்கும் அவர் கள் பயணச்செலவுக்கான பணத்திற்கு எங்கே செல் வார்கள் என்கிற சிறு உண் மைக்கூட மத்திய அரசுக்குப் புலப்படவில்லை, மாநில அரசோ, இன்னும் அதன் முடிவை தெரிவிக்கவில்லை. எனவெ, இந்த கையறு நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி அதனுடைய அறக் கட்டளையில் இருந்து ரூபாய் ஒரு கோடியை தமிழக முத லமைச்சரிடம் வழங்குவது என முடிவு செய்திருக்கிறது. இத்தொகையை வெளி மாநி லங்களில் இருக்கிற தமிழர் களை தமிழகம் கொண்டு வருவதற்கு மட்டும் பயன் படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment