வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் : மத்திய அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 6, 2020

வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் : மத்திய அரசு

புதுடில்லி,மே 6 கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பன்னாட்டளவில் பெருமளவில் உயிரிழப்புகள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப் படுத்திட நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது.


இதனால், கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கரோனா தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராததால், எப்போது கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.


இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment