பா.ஜ.க. தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸைப் பரப்புகிறது சோனியா காந்தி குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 24, 2020

பா.ஜ.க. தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸைப் பரப்புகிறது சோனியா காந்தி குற்றச்சாட்டு


புதுடில்லி, ஏப்.24  பாரதீய ஜனதா தொடர்ந்து வகுப்புவாத வெறுப்பு வைரஸைப் பரப்புகிறது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டினார்.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மூத்த தலைவர்களிடையே உரையாற்றும் போது கூறியதாவது:-


இந்தியர்கள் ஒவ்வொருவரும் கவலைப்பட வேண்டிய ஒரு விஷ யத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கரோனா வைரஸை நாம் ஒற்றுமையாக சமாளிக்கும்போது, ​​பாரதீய ஜனதா தொடர்ந்து வகுப்பு வாத தப்பெண்ணம் மற்றும் வெறுப்பு வைரஸை பரப்புகிறது. நமது சமூக நல்லிணக்கத்திற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது நமது கட்சி, அந்த சேதத்தைச் சரிசெய்ய  கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.


பிரதமர் நரேந்திர மோடிக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளேன்., கொரோனா வைரஸ் போராட் டத்தில் ஆக்கபூர்வ மான ஒத்து ழைப்பையும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் துன்பத்தைத் தணிப்பதற்கான ஆலோசனை களையும் வழங்கினேன். வாய்ப்புக் கேடாக அவை ஓரளவு மற்றும் மோசமான முறையில் மட்டுமே செயல்பட்டுள்ளன.


கரோனா வைரஸ் ஊரடங்கால் விவசாயிகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து கடு மையான கஷ்டங்களையும், துன்பங் களையும் எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக நமது விவசாயிகள், தொழி லாளர்கள் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள், கட்டுமானத் தொழிலா ளர்கள் மற்றும் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள்.  வர்த்தகம் மற்றும் தொழில் ஆகியவை நிறுத்தப்பட்டு  கோடிக்கணக்கான வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட் டுள்ளன.


"மே 3 ஆம் தேதிக்குப் பிறகு நிலைமை எவ்வாறு நிர்வகிக்கப்படும் என்பது குறித்து மத்திய அரசுக்குத் தெளிவான யோசனை இருப்பதாகத் தெரியவில்லை. அந்த தேதிக்குப்  பிறகு தற்போதைய ஊரடங்கு நீட் டிக்கப்பட்டால் இன்னும் அழிவுகர மானதாக இருக்கும்.


கரோனா சோதனை குறைவாகவே உள்ளது; சோதனை கருவிகள் இன் னும் குறைவாகவே உள்ளன மற்றும் கரோனா தடுப்புப் போரின் முன்ன ணியில் இருப்பவர்களுக்குப் பாது காப்பு உபகரணங்கள் தரமற்றவையாக உள்ளன. உணவு தானியங்கள் பயனாளிகளை அடையவில்லை. 11 கோடி மக்கள் பொது விநியோக முறைக்கு வெளியே உள்ளனர். இந்த நெருக்கடி நேரத்தில், குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு மாதமும் 10 கிலோ உணவு தானி யங்கள், ஒரு கிலோ பருப்பு வகைகள் மற்றும் அரை கிலோ சர்க்கரை வழங்குவது எங்கள் உறுதிப்பாடாக இருக்கும்.


ஊரடங்கு  முதல் கட்டத்தில் 12 கோடி வேலைகள் இழப்பு ஏற்பட் டுள்ளது. இந்த நெருக்கடியை எதிர் கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ரூ.7,500 வழங்குவது கட்டாயமானது ஆகும் என கூறி னார்.


No comments:

Post a Comment